மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு

zz1
கிருஷ்ணமூர்த்தி

அவுஸ்திரேலியாஒரு பல்கலாசாரநாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேசபல்லினமக்களும் இங்குவாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில்அமைந்துள்ள பொதுநூலகமண்டபத்தில், இங்குநீண்டகாலமாகவாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடையதாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன.

இந்தநூலகம் அமைந்துள்ளபிரதேசத்திலும் அதற்குஅண்மித்தநகரங்களிலும் சுமார் 120 மொழிபேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை.
கிரகிபேர்ன் நகரத்தில் இலங்கைச் சிங்களசமூகத்தினர் செறிந்துவாழ்கின்றனர். அதனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டதமிழ் நூல்களுக்கு இங்குபரவலானஅறிமுகம் கிட்டியதுமிகவும் பொருத்தமானதுதான்.
இந்தநகரம் ஹியூம் மாநகரசபைக்குள் வருகிறது. இந்தமாநகரசபையின் அங்கத்தவராகதெரிவாகியிருப்பவர் சந்திராபமுனுசிங்க என்ற சிங்கள அன்பர். அவர் இனநல்லிணக்கத்தைமதிப்பவர். அத்துடன் சமூகஒன்று கூடல்களின் ஊடாகபுரிந்துணர்வைசமூகங்களுக்கிடையில் தொடர்ச்சியாகப்பேணுவதற்காகஉழைத்துவருபவர்.
அவரதுமுன்முயற்சியினால் நடந்த இந்ததமிழ் – சிங்கள–ஆங்கில பரிவர்த்தனை இலக்கியநிகழ்ச்சியில் ஹியூம் மாநகரமேயர்,கவுன்ஸிலர் ஜீயோஃப் போர்டர் அவர்கள் பிரதமஅதிதியாககலந்துகொண்டுஉரையாற்றியதுடன் குறிப்பிட்டநூல்களையும் பெற்றுக்கொண்டுவெளியிட்டுவைத்தார்.

வெளியிடப்பட்டநூல்கள்: நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்களமொழிபெயர்ப்பு சமணலவௌ. உனையேமயல்கொண்டு நாவலின் ஆங்கிலமொழிபெயர்ப்பு.முருகபூபதியின் தமிழ்ச்சிறுகதைகளின் சிங்களமொழிபெயர்ப்புமதகசெவனெலி.

கவுன்ஸிலர் சந்திராபமுனுசிங்கதலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் எஸ். பி. எஸ்.சிங்களஒலிபரப்புமெல்பன் ஊடகவியலாளர் திரு. விஜய கருணாசேனவரவேற்புரைநிகழ்த்தினார்.

மேயர் தமது உரையில்,“மக்கள் நூலகங்களைமுடிந்தவரையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முதல் தடவையாக இந்தநூலகத்தில் இப்படி ஒருநிகழ்ச்சி நடப்பது ஏனைய மாநகரசபைகளுக்கும் முன்மாதிரியாகத்திகழும். மொழிபெயர்ப்புகள் இனங்களைதெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவும். இன்று இங்குவாழும் இரண்டு இலங்கைத்தமிழர்களானநொயல் நடேசன்,முருகபூபதிஆகியோருடையநூல்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அறிமுகமாகின்றன. ஏனைய மாநகரநூலகங்களிலும் இதுபோன்ற இன நல்லிணக்கத்தைஉருவாக்கும் கலை, இலக்கியநிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். இந்தப்பிரதேசத்தில் இலங்கைமக்களானதமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கி இனத்தவர்களின் நீண்டநாள் கோரிக்கைகுறித்துநான் கவனம் செலுத்துவேன். அவர்களுக்கெனசமூகமண்டபம் ஒன்றுதேவைப்படுவதைஉணருகின்றேன். இதுபோன்றசந்திப்புகள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும்.”என்றுதெரிவித்தார்.

நூலாசிரியர்கள் பற்றிய அறிமுகத்தைசமூகசெயற்பாட்டாளர் திரு. இராஜரத்தினம் சிவநாதன் நிகழ்த்தினார்.
Lost in you நாவலைஅறிமுகப்படுத்திஉரையாற்றிய ருமதி ஸ்ரீமாவோஎதிரிவீர தமதுஉரையில்,“எமதுசமூகங்களில் அன்றாடம் மறைக்கப்பட்டுவருகின்றஉளரீதியானநோய்கள் குறித்து இந்நாவல் பேசுகிறது. ஏற்கனவேதமிழில் வந்திருக்கும் இந்நாவல் ஏனைய சமூகத்தவரின் சிந்தனைக்காகவும் ஆய்வுக்காகவும் ஆங்கிலத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.”என்றார்.

சமணலவௌநாவலை,விக்ரோரியாமாநிலமுன்னாள் இலங்கைத்தூதுவராலயகொன்ஸலேட் திரு. பந்துதிஸாநாயக்காஅறிமுகப்படுத்திஉரையாற்றுகையில் தெரிவித்ததாவது: “ இந்தக்கதைஅரசியலும் பேசுகிறதுகாதலும் பேசுகிறது. இரண்டுக்கும் இடையேஎமது இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஆழ்ந்தகவனம் செலுத்துகிறது. தமிழில் வண்ணாத்திக்குளம் என்றபெயரிலும் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரிலும் வெளியாகி தற்போதுசிங்களத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தமொழிபெயர்ப்புமுயற்சிமுன்மாதிரியானது. இங்குவாழும் எமதுசிங்களசமூகத்தினர் மத்தியில் வெளியாகும் பஹன இதழிலும் இக்கதைதொடராகவெளியாகிறது. அதற்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.”

முருகபூபதியின் சில சிறுகதைகளின் சிங்களமொழிபெயர்ப்புநூல் மதகசெவனெலிபற்றி உரையாற்றிய கடபத்த என்னும் மாத இதழின் ஆசிரியர் திரு. சாமந்ததென்னகே உரையாற்றுகையில் “தமிழ்,சிங்கள. முஸ்லிம் மக்கள் இலங்கைஅரசியல் நெருக்கடிகளில் எவ்வாறுவாழ்ந்தார்கள் என்பதுபற்றியதார்த்தமாகசித்திரிக்கும் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கொழும்பின் புறநகரில் வாழும் தேவகியும் ஜேமிஸ் ஐயாவும்,யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தபாத்திமாவும் கிழக்கிழங்கையிலிருந்துவந்தராணியும் கதைகளில் வருகிறார்கள் இவரதுகதைகள் ஒருசமூகத்திற்குமாத்திரம் உரித்தானதுஅல்ல.”என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரைவழங்கியடொக்டர் நடேசன் தமதுஉரையில்,“ இலக்கியத்துறைக்குநான் வந்தது தற்செயலானது. எனது மிருகவைத்திய தொழில் அனுபவங்களைமுதலில் எழுத்தில் பதிவுசெய்தேன். அதன் தொடர்ச்சியாகநாவல்கள் எழுதத்தொடங்கினேன். எனது நாவல்கள் இரண்டும் எனதுதாய்மொழியில் முதலில் வந்துதற்போது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வரவாகியுள்ளன. இதன்மூலம் இனநல்லிணக்கத்திற்கு பெரியசேவை செய்துவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால் அதற்கானமுயற்சிகளில் சிறுபங்காளனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.”என்றார்.
முருகபூபதிதமது ஏற்புரையில் இதுவரைகாலமும் இலங்கையில் தமிழ்- சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைஊடாகவெளியானநூல்களின் விரிவானபட்டியலைசமர்ப்பித்ததுடன்,மகாகவிபாரதியாரின் வாழ்க்கைச்சரிதம் மற்றும் அவரதுகவிதைகள் சிங்களத்தில் வெளியாகியிருக்கும் தகவலையும் சொன்னார்.
சிஹனதமாத இதழின் ஆசிரியர் திரு. வில்பிரட் ஸ்ரீவர்த்தன நன்றி உரையாற்றுகையில்,கலை, இலக்கிய,ஊடகவியலாளர்களுக்குரியசமூகப்பொறுப்புணர்வை இந்த இலக்கியபரிவர்த்தனைஅரங்குஉணர்த்தியுள்ளது. இந்தப்பணி இத்துடன் முற்றுப்பெற்றுவிடாமல் ஏனைய பிரதேசங்களிலும் மாநிலங்களிலும் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் தொடரவேண்டும்”என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் – சிங்களமேலைத்தேயஉணவுவகைசிற்றுண்டிதேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது.
—-0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: