பயணியின் பார்வையில் — 14

tc2
இயற்கையும் இயக்கமும் படைகளும்
முருகபூபதி

முல்லைத்தீவு கடலைப்பார்க்கச் சென்றபோது இயற்கையும் இயக்கமும் படைகளும் மனிதஉயிர்களுடன் எவ்வாறுவிளையாடியிருக்கின்றன என்பதற்குஆதாரமானதகவல்கள் பலமனதைக் குடைந்துகொண்டிருந்தன.

இலங்கையில் சுனாமிகடற்கோள் அனர்த்தம் மனிதப்பேரழிவைநிகழ்த்தியபின்னர்,புனர்வாழ்வுக்காகவும் மீள்கட்டுமானத்திற்காகவும் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இயங்குவதற்குஅச்சமயம் பதவியிலிருந்தசந்திரிக்காகுமாரணதுங்காமுயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
a
இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையே இயற்கை ஒருபுரிந்துண்ர்வை ஏற்படுத்துவதற்கு முனைந்தது. ஆனால் ஆறாறிவுபடைத்தஅரசியல்வாதிகள் அதற்கும் முட்டுக்கட்டைபோட்டனர்.
சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக புலிகளும் இனமதமொழி வேறுபாடின்றிதொண்டாற்றினர். பிரபாகரன் தனது இயக்கத்தின் சார்பாக நிவாரணப்பணிகளுக்கு 30 கோடிரூபாவழங்கத்தயாராக இருந்ததாகஒருபத்திரிகையில் தலைப்புச்செய்திவந்தது.
முல்லைத்தீவுகடற்கரையோரமாகஅமைந்திருந்ததேவாலயம் சுனாமியின்போதுஅங்கு ஜெபத்திலிருந்தநூற்றுக்கணக்கானபொதுமக்களுடன் அடித்துச்செல்லப்பட்டது. அந்த இடத்தில் சுனாமியின் நினைவாகஒருதேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.

தேவாலயத்தில் யேசுபிறப்பின் பிரார்த்தனையிலிருந்தமக்களை இயற்கை இப்படிஅழித்துஅழைத்துச்சென்றதுபோன்றுஆயுதப்படைகளும் தேவாலயங்களில் நின்றமக்களைகொன்றழித்திருக்கிறது.
b
குருநகர் புனிதயாகப்பர் தேவாலயம் 1993 இலும் நாவலிபுனிதபீற்றர்ஸ் தேவாலயம் 1995 இலும் படைகளின் வான் தாக்குதலினால் தாக்கப்பட்டவேளைகளில் நூற்றுக்கணக்கானமக்கள் பலியாகினர்.

இலங்கைத்தமிழ் மக்களை இயற்கையும் வஞ்சித்தது. படைகளும் வஞ்சித்தன. இயக்கமும் பணயம் வைத்துஅழித்தது. முல்லைத்தீவுகடலில் தரைதட்டிநிற்கும் கப்பல் உருக்குலைந்து கறள்பிடித்துஅநாதரவாககாட்சிதருகிறது. கப்பல் ஓட்டியதமிழர்கள் தூத்துக்குடியிலும் வல்வெட்டித்துறையிலும் இருந்தார்கள் என்றால்,கப்பல் கடத்திய இயக்கத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதற்குசாட்சியாகஅந்ததுருப்பிடித்தகப்பல் சாட்சியாகஅங்கேநிற்கிறது.
அதுஅந்தக்கடலுக்கு தரித்திரம் என்றுநினைத்துத்தான்

என்னவோஅதனைஅங்கிருந்துஅகற்றுவதற்குநடவடிக்கைஎடுக்கப்படுவதாகவும் ஒருசெய்திகசிந்தது.

நீர்வளம்,நிலவளம் கொழித்தவிவசாயபூமிகடல்வளத்தினால் பல்லாயிரம் மீனவக்குடும்பங்களைவாழவைத்தபூமி, (சிலாபம்,நீர்கொழும்புமுதலானபிரதேசங்களிலிருந்தும் இங்குகடற்றொழிலுக்குமீனவர்கள் வந்தகாலம் ஒன்றுமுன்பிருந்தது.) இன்றுஆயுதங்களின் -அழிவுகளின் காட்சியகமாகிசுற்றுலாவருபவர்களுக்குபலசெய்திகளைசொல்லிக்கொண்டிருக்கிறது.
போர் நடந்தபிரதேசங்களைசுற்றிப்பார்த்தோம். நண்பர் கருணாகரன் உடனிருந்தமையால் பல இடங்களைஎமக்குஅறிமுகப்படுத்தினார். பேரழிவின் மௌனசாட்சியாகியுள்ளஅந்தமண்ணில் மடிந்தமக்களுக்குமௌனமாகவேமனதுக்குள் கண்ணீர்வடித்தவாறுநடமாடினேன்.
நண்பர் இடங்களைகாண்பித்தபோதுமௌனமாகவேதலையசைத்தேன். அங்குநடமாடியபலமணிநேரங்களில் நான் பேசியவார்த்தைகள் சிலவே.
அங்குவந்துகுவியும் தென்னிலங்கைமக்களிடமும் மௌனமேகுடியிருந்ததைஅவதானிக்கமுடிந்தது. அந்தமௌனங்கள் களைந்தால் வெளிப்படும் உணர்வுகள் எப்படியிருக்கும் என்றுயோசித்தேன்.
c
அங்குகாணப்பட்ட இயக்கத்தின் ஆயுதங்கள்,நீர்மூழ்கிக் கப்பல்கள்,நீர்மூழ்கிக் கப்பல்களைகடலுக்குள் அனுப்புவதற்காகஉருவாக்கப்பட்டகால்வாய்,விசைப்படகுகள்,கடற்புலிகள் பயிற்சிபெற்ற 22 அடிஆழம் கொண்டபெரியநீச்சல் தடாகம்,டாங்கிகள்,பிரபாகரன் மறைந்திருந்துஉத்தரவுகளைவிடுக்கும் அந்தநான்குபாதாளதளங்கள் கொண்டவீடு,புலிகளின் தளபதிகள் போரில் கொல்லப்பட்டால் அவர்களுக்குவீரவணக்கம் செலுத்துவதற்குபிரபாகரன் தனதுபாதாளஅறைகள் கொண்டவீட்டின் அருகேஅமைத்திருந்தவீரவணக்கமண்டபம்….. புலிகள் வலிமையுடன்தான் இருந்தார்கள் என்பதைபறைசாற்றுகின்றன.

இந்தபடைபலத்திற்குப் பின்னால் இருந்தமனித உழைப்பு, மூளை உழைப்பு எல்லாம் என்னவாகின? நீர்மூழ்கிக்கப்பல்களையும் விமானங்களையும் பாரியநீச்சல்தடாகத்தையும் மட்டுமன்றி ஏனைய ஆயுதகளஞ்சியங்களையும் அந்தவன்னிக்காட்டுக்குள் நிர்மாணிப்பதற்குதேவைப்பட்டஉடல் உழைப்புமட்டுமல்ல மூளை உழைப்பும் மிகவும் பெறுமதியானதுதான்.

இந்தஉழைப்புக்குப்பின்னால் இருந்தவர்கள் எல்லோரும் எங்கே…? என்றுகேட்டார் என்னுடன் வந்தவேன் சாரதி. உதடுபிதுக்கல்தான் எனதுபதில்.

பிரபாகரனின் அந்தபாதாளஅறைகள் கொண்டவீட்டுக்குஅருகில் புலித்தளபதிகளுக்குவீரவணக்கம் செலுத்தும் சிறியமண்டபத்திற்குமுன்னால் நின்றவாறுஒரு இராணுவஅதிகாரிசுற்றுலாவுக்குவந்துள்ளதென்னிலங்கைமக்களுக்குசிங்களத்தில் விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.

அந்த இடத்தில் தமிழர்கள் நாங்கள் ஆறுபேர் மாத்திரம்தான். அதில் என்னோடுசேர்த்து மூன்று பேருக்குத்தான் சிங்களம் தெரியும்.

நான் இந்தப் பத்தியில் மேலேகுறிப்பிட்டபுலிகளின் களத்தைசுற்றிப்பார்த்துவிட்டு இறுதியாகஅந்தவீரவணக்கசிறுமண்டபத்தின் முன்னால்தான் அந்தஅதிகாரியின் குரைலக் கேட்கமக்கள் குழுமுகின்றார்கள்.

புலிகளின் கார்த்திகைமலர் முதல் அவர்கள் எவ்வாறு அந்தக்காட்டுக்குள் இயங்கினார்கள் என்பதுவரைஅவர் விஸ்தாரமாகஎடுத்துரைக்கிறார். அந்தஉரையில் அவர் சொன்னஒருதகவல் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.

புலித்தளபதிகள் போரில் கொல்லப்பட்டுவிட்டால் அவர்களின் வித்துடல் முதலில் ஒருசவப்பெட்டியில் பிரபாகரனின் குறிப்பிட்டபாதாளவீட்டிலிருந்துசிலஅடிகள் தூரம் வரைக்கும் கொண்டுவரப்படுமாம். அதன் பின்னர் வித்துடலை சவப்பெட்டியிலிருந்து எடுத்து ஒரு ஸ்ரெச்சரில் வைத்துஅந்தவீரவணக்கமண்டபத்திற்குகொண்டுவருவார்களாம். உடலைஅங்கிருந்தநீண்டமேசையில் வைப்பார்களாம். அதன் பின்னர் பிரபாகரன் வந்துவீரவணக்கம் செலுத்தியபின்னர் மீண்டும் ஸ்ரெச்சரில் வைத்துவெளியேஎடுத்துவந்துசவப்பெட்டியில் வைத்துபுதைப்பதற்காகஎடுத்துச்செல்வார்களாம்.

ஏன்…அப்படி…? என்றுஅந்தஅதிகாரியேவந்திருப்பவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டு,அவரேஅதற்குப் பதிலும் சொல்கிறார்.

பிரபாகரன் எவரையும் நம்பமாட்டார். அந்தசவப்பெட்டிக்குள்ளும் தன்னைதாக்கிஅழிப்பதற்குஉடனிருப்பவர்கள் வெடிகுண்டுபொருத்திஎடுத்துவரலாம் என்றபயம் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால்தான் அந்த ஸ்ரெச்சர் ஏற்பாடு,

அந்தஅதிகாரிஅவ்வாறுசொன்னபோது பிரபாகரன்,தமிழ்ச்செல்வன் உட்படபலமுக்கியதளபதிகள் கொல்லப்பட்டபோதுவீரவணக்கம் செலுத்தியபடங்கள் ஊடகங்களில் வெளியானசந்தர்ப்பங்களைநினைவுப்பொறிக்குள் கொண்டுவரமுயற்சித்தேன்.
எனினும் 2009 மேமாதம் அதேபிரபாகரன் ஒரு ஸ்ரெச்சரில் படைகளினால் எடுத்துவரப்பட்டபோதுவீரவணக்கம் செலுத்துவதற்குஎவரும் அருகில் இல்லையே… இப்பொழுதும் இல்லையே….என்றுநினைத்தபோதுஒருபேரியக்கத்தலைவனின் முடிவு இப்படியாகிவிட்டதா? என்றுயாரிடம் கேட்பது?

பிரபாகரனின் ஆத்மா“யாரொடுநோவேன்…? யார்க்கெடுத்துரைப்பேன்? ” என்றுஓலமிட்டதோதெரியவில்லை.

முல்லைத்தீவும் முள்ளிவாய்க்காலும் போரின் சுவாசக்காற்றால் நிரம்பியிருக்கிறது. சர்வதேசசமூகம் அங்குநிகழ்ந்தபேரழிவுக்குபின்னல் நின்றதுபிரபாகரனா, இந்தியாவா, இலங்கையா,அல்லதுஆயுதத்தரகர்களா,என்றுபட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது.
மனிதப்பேரழிவுநடந்தபோர்க்களத்தைபார்க்கவரும் தென்னிலங்கைமக்களுக்குஅந்தபாதுகாப்புப்படைஅதிகாரிமிகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் ஒருசிறுசெய்தியைசொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

“பிரபாகரனும் அவரது இயக்கமும் எப்படிவலிமையுடன் இருந்தார்கள் என்பதைபார்த்தீர்களா? இவர்களைவிட்டுவைத்திருந்தால் முழு இலங்கையையும் கபளீகரம் செய்திருப்பார்கள். உங்களுக்காகஅவர்கள் அழிக்கப்பட்டார்கள்.”

மௌனிகளாகவந்துபோரின் சாட்சியதடயங்களைபார்க்கும் சிங்களமக்கள் எந்தமுடிவுடன் செல்வார்கள்? என்பதுபுரிந்தவர்களுக்குப்புரியும்.

வீரத்தைமாத்திரம் நம்பியவர் கொஞ்சம் விவேகத்தையும் நம்பியிருக்கலாம். தம்வசம் எத்தகைய படைபலம் இருக்கிறது என்பதைஒருகாலகட்டத்தில் யாழ்.மாவட்டதளபதியாக இருந்தகேர்ணல் கிட்டு இலங்கை பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு (இராணுவதளபதிகொத்தலாவலை) காண்பித்தபோது துப்பாக்கிகளைத்தான் காண்பித்தார்.
ஆனால் காலப்போக்கில் தமிழகஆனந்தவிகடன் ,நக்கீரன் முதலானஊடகங்கள் உட்படபலவெகுஜன ஊடகங்களுக்கு,தரைப்படை,கடல்படை,மகளிர் படை,தற்கொலைப்படை,வான் படை…என்றுபடம்போட்டுகாண்பித்து“ ஷோ”காட்டினார்கள்.

அதனையெல்லாம் பார்க்கும் எதிரி பாயாசமா குடித்துக் கொண்டிருப்பான்.பணியாரமாசாப்பிட்டுக்கொண்டிருப்பான்.
பலத்தைமறைத்தவாறு‘டீல்’ போட்டிருக்கலாம். என்றகுரல்தான் ‘ஷோ’காட்டியவர்களின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து இப்பொழுதுஒலிக்கிறது.

இப்பொழுது இந்த“ஷோ” க்களின் வடிவங்கள் மாறியிருக்கின்றன.

(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: