ஆளுமைகளின் நடுவேஒரு இலக்கியயாத்திரை

பயணியின் பார்வையில் -02

தமிழ் நாவல்கள் சர்வதேசதரத்தில் அமைந்துள்ளனவா?

–விவாதத்திற்கானபுள்ளி. புள்ளியிலிருந்துகோலம் வரைவோம்.

முருகபூபதி

தமிழில் வெளியான சிறந்த பத்துநாவல்கள் தொடர்பாக தமிழகபடைப்பாளி ஒருவர் இதழொன்றில் பதிவு செய்ததகவலைபடித்த,அவுஸ்திரேலியாவில் வதியும் எனது நண்பர் அவற்றை தாமதமின்றி தமிழகத்திலிருந்து தருவித்து எனக்கு காண்பித்தார்
அந்தப்பட்டியலில் இடம் பெற்ற சிலநாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கின்றேன். உணவில் ருசிபேதம் இருப்பதுபோன்று வாசிப்பு அனுபவத்திலும் ருசிபேதம் தவிர்க்கமுடியாதது.
ஒருவருக்குப்பிடித்தமான படைப்பு மற்றுமொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். வாசிப்புஅனுபவங்கள் வித்தியாசமானவை.
சென்னையிலிருந்துயுகமாயினிசித்தன் நாமக்கல்லுக்குஎம்மைச்சந்திக்கவரும்வரையில் மொழிபெயர்ப்பு படைப்புகள் குறித்து எனக்கும் சின்னப்பபாரதிக்கும் இடையே உரையாடல் நடந்துகொண்டிருந்தது. சின்னப்பபாரதியின் நாவல்கள் சில இந்தியமொழிகளிலும் ஐரோப்பியமொழிகளிலும் சிங்களமொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கும் தகவல்களைஅவர் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.
சித்தன் வந்தபிறகு அவரைவரவேற்று உபசரித்த சின்னப்பபாரதி என்னுடன் நடத்தியஉரையாடலைத் தொடர்ந்தார். சித்தனை தமது நூலகஅறைக்குஅழைத்துச் சென்று வெளியாகியிருக்கும் தனதுமொழிபெயர்ப்புபடைப்புகளைகாண்பித்தார்.

இவ்வாறுபலமொழிகளிலும் ஒருவரதுபடைப்புமொழிபெயர்க்கப்பட்டுநூலுருவில் வெளியாவதும் ஒருவகையில் படைப்பாளிக்குகிட்டும் அங்கீகாரம் எனச்சொன்னார் சின்னப்பபாரதி.

உடனேசித்தன் அதனை மறுத்துரைத்தார்.

“மொழிபெயர்ப்பில் ஒருநாவல் வெளியானால் அதனை இலக்கியஅங்கீகாரம் எனஎப்படிஏற்றுக்கொள்ளமுடியும். ஒருநாவல் சர்வதேசதரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமேஅதற்குஅங்கீகாரம் தரமுடியும். ஒருநாவல் இந்தியமொழிகளிலும் ஐரோப்பியமொழிகளிலும் வெளியாகிவிட்டால் அந்தப்படைப்புஉன்னதமானது,தரமானது,உலகஅங்கீகாரம் பெற்றதுஎன்ற முடிவுக்குவந்துவிடலாமா?”எனக்கேட்டதும் எமதுஉரையாடல் வேறுதிசையில் திரும்பியது.

சின்னப்பபாரதிநிமிர்ந்துஅமர்ந்தார்.

“ஒருநாவல் அந்தநாவலின் படைப்பாளியின் தாய்மொழியில் எழுதப்பட்டு அதனைபிறமொழிவாசகருக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஒருமொழி பெயர்ப்பாளர் பிறமொழியில் தரமுனைவதுகூட அங்கீகாரம்தான். மொழிபெயர்ப்பாளர்

அந்தப்படைப்பை மொழிபெயர்க்க விரும்பியதனால்தானே பிறமொழிவாசகனுக்க அந்தப்படைப்பு கிடைக்கிறது.அத்துடன் மொழிபெயர்ப்புக்குதகுதியான படைப்பு என்றசிந்தனைமொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதனால் அவர் குறிப்பிட்டபடைப்பைமொழிபெயர்க்கின்றார். ஒருவகையில் இது ஒருஅங்கீகாரம்தான்.” என்றார் சின்னப்பபாரதி.
அண்மைக்காலங்களில் இலங்கையில் பலதமிழ் நாவல்கள் சிங்களத்திற்கும் சிங்களநாவல்கள் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தகவலைசித்தனிடம் சொன்னேன். நண்பர் திக்குவல்லைக்கமால் எனக்குஅனுப்பியிருந்தபட்டியலையும் குறிப்பிட்டேன்.

“ஐயாஎத்தனைபடைப்புகளும் மொழிபெயர்க்கப்படலாம்…ஆனால் அவை சர்வதேசதரத்திற்குஉயர்ந்திருக்கிறதா? என்பதுதான் எனதுகேள்வி.”என்றார் சித்தன்.சற்றுஅட்டகாசமாகவும் சிரித்தார்.

சித்தன் ஆங்கில இலக்கியபரிச்சயம் மிக்கவர். பலர் தமிழில் மொழிபெயர்த்தபலமேலைத்தேய இலக்கியங்களைஏற்கனவேஆங்கில மூலம் படித்திருப்பவர்.மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுபவர். (சித்தனின் மொழிபெயர்ப்புக்கூட வெளிநாட்டில் வதியும் ஒருவரது பெயரில் வெளியாகியிருப்பதுஎனதுகாதி விழுந்த வியப்பானதகவல்)அவர் சிலநல்லமொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டார். எனினும் தமிழில் குறிப்பிட்டுச்சொல்லும்படியானசர்வதேசதரத்தில் அமைந்தநாவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லைஎனதொடர்ந்துசொல்லிக்கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் சின்னப்பபாரதிக்குசித்தனின்கருத்துக்கள் எரிச்சல் ஊட்டியதையும் அவதானித்தேன். அவர் திடீரெனஎழுந்து,“மதியமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டுபேசுவோமா?”என்றார். மதியஉணவருந்தும்போதும் சித்தன் விட்ட இடத்திலிருந்துதனதுவாதத்தைவலியுறுத்தினார்.

“முதலில் சாப்பிடுங்கய்யா…அதன் பிறகுபேசுவோம்”என்றுசின்னப்பாரதிசொன்னபிறகேசித்தன் அமைதியடைந்தார்.
ஏற்கனவேசாருநிவேதிதாவும் இப்படிதடாலடியாகதமிழில் இன்னமும் மிகஉயர்ந்ததரத்தில் போற்றக்கூடியநாவல்கள் வெளியாகவில்லை என்று சொன்னவர்தான். கா.நா.சு படித்திருக்கிறீர்களா?என்றதலைப்பில் வெளியிட்டதொகுப்புகளில் சிலஎழுத்தாளர்களின் ரசனையைஅவர்கள் படித்தநாவல்களிலிருந்துவெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயமோகனும் தான் படித்த சிறந்தநாவல்கள் (மொழிபெயர்ப்புகள் உட்பட) பற்றிவிரிவாகஎழுதியிருக்கிறார். இலங்கையில் கே.எஸ்.சிவகுமாரன் உட்படசிலதிறனாய்வாளர்கள் இலங்கையில் வெளியானநாவல்கள் பற்றிஅறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நாவல் நூற்றாண்டுகைலாசபதிகாலத்தில் பல்கலைக்கழகமட்டத்தில் விரிவாகப்பேசப்பட்ட.து.
செ.கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்குகைலாசபதி எழுதிய நீண்டமுன்னுரையே பின்னர் அவரால் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் நாவல் இலக்கியம் என்றநூலாகவெளியானது. அதனைகடுமையாகவிமர்சித்துவெங்கட் சாமிநாதன் – மாக்சீயகல்லறையிலிருந்துஒருகுரல் என்றநீண்டவிமர்சனத்தைஎழுதியிருக்கிறார். இலங்கையில் பூரணி இதழ் அதனைகாலத்தின் தேவைகருதிமறுபிரசுரம் செய்தவுடன்,அதற்குஎதிர்வினையாற்றி நுஃமான் மல்லிகையில் ஒருவிமர்சனத்தொடர் எழுதினார். மு.பொன்னம்பலம் அதற்குஎதிர்வினையாகஒருபதிலுரையைமல்லிகையில் பதிவுசெய்தார். அத்துடன் அந்தவிவாதம் முற்றுப்பெறவில்லை.ஈழத்து இலக்கியவிமர்சனஉலகம் முகாம்களாகபிளவுபட்டது.
இது இவ்வாறிருக்க,இலங்கையில் தலைசிறந்தநாவல்கள் இவைதான் என்றுஎவரும் துணிந்துசொல்லமுன்வரவில்லை. தலித் இலக்கியமுன்னோடிஎனச்சொல்லப்படும் டானியல்,மற்றும் செங்கைஆழியான், செ. கணேசலிங்கன்,தெணியான், எஸ்.பொ., இளங்கீரன்,செ.யோகநாதன் உட்படபலர் நாவல்கள் எழுதியிருக்கின்றனர். விமர்சகர் சுப்பிரமணியஐயர் இலங்கைத்தமிழ் நாவல்கள் குறித்துவிரிவாகத்திறனாய்வுசெய்துள்ளார். எனினும் அவராலும் தலைசிறந்தஈழத்துநாவல்கள் எனபட்டியல் இடமுடியவில்லை.
புகலிடநாடுகளில் பலரதுநாவல்கள் கவனிப்புக்குள்ளாகியுள்ளன. (அவைபற்றியஅறிமுகக்குறிப்புகளைஅண்மையில் அவுஸ்திரேலியாவில் வதியும் கே.எஸ்.சுதாகர் எழுதியிருக்கிறார்.)
இந்தப்பின்னணிகளுடனும் தமிழ்நாட்டில் வெளியானதமிழ்நாவல்கள் தொடர்பானபுரிதலுடனும்தான் நாம் ஒருமுடிவுக்குவரமுடியும்.
மதியஉணவின்பின்னரும் விவாதம் தொடர்ந்தது. தமிழ்நாவல் நூற்றாண்டைகடந்திருந்தபோதிலும் இதுவரையில் தமிழில் குறிப்பிடும்படியானசர்வதேசதரம்வாய்ந்தநாவல்கள் வெளியாகவே இல்லைஎன்பதையேசித்தன் வலியுறுத்திக்கொண்டிருந்தார். “ஒருவரதுபடைப்புகள் எத்தனைமொழியிலும் வரலாம். அந்தப்பட்டியல் மாத்திரம் அவற்றின் மூல ஆசிரியரின் தரத்தைதீர்மானிக்காது”என்றார்.
2012 இல் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கும் பூமணியின் ‘அஞ்ஞாடி’என்றபெரியநாவல் தன்னைப்பொறுத்தவரையில் சர்வதேசதரத்தில் வைத்து ஓரளவு….ஓரளவுதான் பேசக்கூடியநாவல். அதனைபடியுங்கள் என்றும் சித்தன் சொன்னார்.
சென்னைக்குச் சென்றதும் வாங்குவேன் என்றேன்.சித்தனின் கருத்தோடு எம்மால் ஒத்துப்போகமுடியவில்லை. வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன. சோஷலிஸ யதார்த்தவாதப்படைப்புகள் தற்காலத்தில் ஏற்புடையதல்லஎன்றும் பின்நவீனத்துவபடைப்புகளே இப்போதுபெரிதும் கவனிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் சித்தன் சொன்னார்.
மெஜிக்கல் ரியலிஸ படைப்புகள் பற்றியும் பேசினோம். எல்லாவற்றையும் தீர்மானிப்பதுகாலம்தான் என்றமுடிவுக்குஏகமனதாகவந்தபின்பு,எமதுஉரையாடல் வேறுஒருதிசையில் திரும்பியது.
புலம்பெயர்ந்தவர்களின் புகலிடபடைப்புகள் பற்றிஉரையாடினோம். இந்தஉரையாடலிலும் சித்தன் ஒருகருத்தைவலியுறுத்தினார். ஒருகாலகட்டத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றுதான் பரவாலகப்பேசப்பட்டது. இதற்குவித்திட்டவர்கள் இலங்கையிலிருந்துவெளிநாடுகளுக்குச்சென்றவர்கள்தான் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை. இன்றுஅவுஸ்திரேலியா,கனடா,டென்மார்க்,பிரான்ஸ், ஜெர்மனி,நோர்வே, இங்கிலாந்துமுதலானநாடுகளில் இருந்துபடைப்புகள் வெளியாகின்றன. இந்தப்பணி இந்தத்தலைமுறையுடன் முடிந்துவிடும். அந்தந்தநாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அந்தந்தநாட்டுமொழியூடாகத்தான் படிப்பார்கள். அவர்கள் தமிழில் எதனையும் படிக்கமாட்டார்கள். சிலவேளைதமதுநாட்டின் பிரதானமொழியில் பெயர்க்கப்படும் படைப்புகளைபடிக்கக்கூடும். எனவேவருங்காலத்தில் அவுஸ்திரேலிய இலக்கியம்,கனடா இலக்கியம்,டென்மார்க் இலக்கியம்,பிரான்ஸ் இலக்கியம் என்றுதான் பார்க்கவேண்டும். ஒருதலைமுறைகடந்தகால்நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாகவெளிநாடுகளிலிருந்துகொண்டுபுலம்பெயர்ந்தோர் இலக்கியம் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கிறது. கனடாவிலிருந்துகொண்டுசென்னைஅண்ணாநகர் பற்றிஒருவர் எழுதினால் அதனையும் புலம்பெயர்ந்த இலக்கியம் எனச்சொல்லமுடியுமா…? எனக்கேட்டார் சித்தன்.
இதுபற்றியவிவாதமும் இலக்கியப்பரப்பில் தொடங்கிவிட்டது. ஒருபடைப்பாளிதன்னைப்பாதிக்கும் விடயங்களைஎழுத்தில் பதியவைப்பது இயல்பு. இன்றுஉலகம் சுருங்குகிறது. புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளர்கள் வெளிநாட்டுப்பயணங்களைமேற்கொள்கின்றனர். தமதுதாய்நாட்டுக்கும் சென்றுதிரும்புகின்றனர். அவர்களைபாதிக்கும் சம்பவங்கள் இலக்கியப்படைப்பாகவரும்போது,அந்தப்படைப்பு,தமிழகத்தையோஈழத்தையோபின்னணியாகக்கொண்டிருக்கலாம். அதற்காகஅவர் கனடாவில் வாழ்வதனால் கனடாபின்னணியுடன்தான் எழுதவேண்டும் என்றுவிமர்சிக்கமுடியாதல்லவா? எனக்கேட்டேன்.
அவரவர் வாழும் நாடுகளைஅந்நாடுகளின் வாழ்வியலை,கலாசாரத்தை,உள்வாங்கியவாறுஎத்தனைபேர் எழுதுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்கவேண்டும். பரஸ்பரம் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இந்தப்புரிதல் இருக்கவேண்டும்.
நாமக்கல்லில் இந்தஉரையாடல்களுக்குமுற்றுப்புள்ளிவைத்துவிட்டுகோவைநோக்கிபுறப்படத்தயாரானோம். நண்பர் சின்னப்பபாரதி,என்னையும் சித்தனையும் ஒருவாகனத்தில் அழைத்துக்கொண்டுநாமக்கல் நகரைசுற்றிக்காண்;பித்துவிட்டு,கோவைசெல்வதற்குவிடைகொடுத்தார்.
நாம் இருவரும் ஈரோடுவந்துஅங்கிருந்துகோவைக்குபுறப்பட்டோம்.
“இரண்டுகருத்துக்களைவலியுறுத்தியிருக்கிறீர்கள். ஒன்றுசர்வதேசதரத்தில் தமிழ்நாவல்கள் இல்லைஎன்பது,மற்றது,புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என இனிமேல் பேசாமல் அந்தந்தநாட்டு இலக்கியம் எனப்பேசுங்கள்…என்பது இதுபற்றிஏதும் இதழ்களில் எழுதிவிவாதத்தைதொடருங்கள்”என்றுசித்தனிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
விரைவில் தான் சம்பந்தப்பட்டதிரைப்படவேலைகள் தொடங்கவிருப்பதாகவும் அதன்பின்னர் எழுதுவதாகவும் சித்தன் சொன்னார்.
நாம் கோவைக்குவந்து with Chithanசேரும்பொழுது இரவாகிவிட்டது.

(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: