மெல்பேண் சர்வதேச திரைப்பட விழா

Few years old writing
நடேசன்

ULZHAN-

என்னோடு சில காலத்திற்கு முன்பு வேலை செய்த ஒருவர் தனது வேலையில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து மெல்பேண் சர்வதேச திரைப்பட விழாவில் காட்டப்படும் படங்களைப் பார்ப்பார். அப்படி செய்ய  எனக்கு ஆசை. சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. அந்த நண்பரின்மேல் ஒரு சிறிய பொறாமை உணர்வு ஏற்படும்.

சிறுவனாக இருந்தபோது டாக்டர், என்ஜினியர் என உத்தியோகம் பார்க்க ஆசைப்படவில்லை. தியேட்டர் ஒன்றில் வேலை செய்யவே ஆசை இருந்தது. அந்த அளவு சினிமா என்னை பாதித்து இருந்தது.

இம்முறை மெல்பேண் திரைப்பட விழாவில் பல படங்களை பார்க்க திட்டம்போட்டிருந்தேன். பல காரணங்களுடன் மெல்பேண் குளிரும்சேர்ந்து இரண்டு படங்களை மட்டுமே பார்க்கமுடிந்தது.

இரண்டும் ஜெர்மன் டைரக்டர்களால் நெறிப்படுத்தப்பட்டவை.

உல்சான்
(Ulzhan)
பிரபலமான ஜெர்மன் டைரக்ரர் வொல்கர் ஸொலண்டெர்வ்வால் (Volker Schlondorf) இயக்கப்பட்டது.

பரிசை சேர்ந்த பாடசாலை ஆசிரியர். மத்திய ஆசிய நாடான காசாக்கிஸ்தானுக்கு பிரயாணம் செய்கிறார். இவருடன் ஒரு ஜிப்சியும் சேர்ந்துகொள்கிறான். இந்தப் பயணத்தில் காசகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஆசிரியரை சந்திக்கிறான். இந்த பயணத்தின் நோக்கம் புதையலைத்தேடுவதற்காக என கூறப்படுகிறது. பின்பு மரணத்தைதேடி செல்லும் பயணம் என கடைசியில்தான் பார்ப்போருக்கு புரிகிறது.
எப்படியும் அவனை காப்பாற்றவேண்டும் என்ற பெண்ணுக்கு நடக்கும் போராட்டமாக இந்தப்படம் புரிந்துகொள்ளப்படுகிறது.

பாலைவனத்திலும் பின்பு அழகான மத்திய ஆசிய மலைப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஒரு சைக்கோலஜிகல் திரில்லர். கடைசியில்; திரைப்படக்கதை மெதுவாக பூக்கும் ஒரு ராட்சத மலர்போல் திரையில் விரிந்துகொள்கிறது. கதையில் வசனங்கள் இரண்டு அல்லது மூன்று கடுதாசியில் எழுதிக்கொள்ளலாம். கான்ஸ் திரைப்பட விழாவால் சிறப்பு படமாக திரையிடப்பட்டது.

நான் வேறு பெண்
(I am the other women)

ஜெர்மனிய பெண் டொக்ரர் மார்கிறற்றா வொரொற்றாவங் (Margarethe von Trota) நெறிப்படுத்தப்பட்ட இந்தப்படம் மல்ரிப்பின் பேசனல்டி டிஸ் ஒடா எனப்படும் மனநோயுள்ள மெண்ணை மையப்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் வைன் தயாரிக்கும் பணக்கார குடும்பத்தில் வந்த இளம் பெண் பகலில் தகப்பனுக்கு அடங்கிய பெண்ணாகவும் இரவில் விடுதிகளில்சென்று விபச்சாரம் செய்யும் விலைமாதாகவும்வரும் பாத்திரமாகிறாள். இவளை காதலிக்கும் சிவில் என்ஜினியருக்கும் இவனது தகப்பனுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் இந்தப்படத்தை நகர்த்துகிறது. இந்தப்படம் ஒரு சைக்கோலஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்தது.

இந்த இருபடங்களிலும் வசனங்கள் மிகவும் சொற்பமாக பேசப்படுகிறது. கமரா தனது நிழல் படத்தால் கதையை பார்ப்பவர்களுக்கும் புரியவைக்கிறது. படங்களில் ஏற்படும் பாதிப்பு மனங்களில் பல காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

இப்படங்களைபார்க்கும்போது எனது மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நமது தமிழ்ப்படங்கள் கலைப்படைப்பாக உலகதரத்துக்கு வராததற்கும் நாடகங்களில் இருந்து வந்த மிகைநடிக்கும் நடிகள்களாதான் காரணம் என நினைத்திருந்தேன். அது தவறு என புரிந்துகொண்டேன். மாறாக அரசியல் சித்தாந்தத்தை மக்களிடம் புகுத்தவிரும்பி மணிக்கணக்காக வசனங்களை பேசவைத்த வசனகர்த்தாக்கள்தான் உண்மையில் கமராவை சோம்பலடைய வைத்துவிட்டார்களோ என நினைக்கிறேன். அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட கழகத்தினர் அரசியல் வளர்க்கவிரும்பி கலை வடிவத்தை விகாரமாக்கிவிட்டார்களோ என்று சிந்தித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: