முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு,

பத்துவருடங்கள் முன்பு எழுதிய பத்தியை மீண்டும் எடுத்து பார்த்தேன். இப்பொழுது நிலையை எனக்குத் தெரியாது. ஆனாலும் பதில் கிடைக்காததால்மீண்டும் வெளியிடுகிறேன்

Chief Minister

Chief Minister

அக்காலத்தில் என் அபிமான நடிகையாகவும் தற்போது தமிழ் மக்களின் மதிப்புக்குரிய முதல்வராக இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு,

சிலமாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் அவுஸ்திரேலியன் ஒருவரின் மடல்.

இந்தியாவின்பால் குறிப்பாக தமிழக மக்கள் மீது எனக்கு அக்கறையும் நன்மதிப்பும் பெருமளவில் உள்ளது. இலங்கையில் வாழ்ந்த காலத்தில் உயிர்தப்பி வாழ மூன்றுவருடங்கள் உங்கள் நாட்டில் வாழ்ந்தேன். அடைக்கலம் மட்டுமல்ல நான் பல்கலைக்கழகங்களில் படித்தறியாத பல விடயங்களை அங்கு அறிந்து கொண்டேன். 83-87ம் ஆண்டு காலத்தில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழருக்கு உணவு, உடை, உயிருக்குப் பாதுகாப்பு கொடுத்ததற்கு எனது நன்றிகள் தமிழகத்துக்கு உரித்தாகுக.

தற்போதும் ஏராளமான இலங்கைத் தமிழ் அகதிகள் உயிர்பாதுகாப்புடன் உணவு, உடை, என்பவற்றுடன் கல்வியும் பெற்றுவருவதையும் நான் அறிவேன்.

தங்கள் காலத்திலும் இவை தொடர்ந்து நடக்கிறது.

அது போகட்டும். நான் கேட்கவந்த விடயம் அதுவல்ல.

சமீபத்தில் தமிழகம் வந்தபோது சென்னை பரிஸ்கோணரில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன்.

”இழந்த ஆண்மைக்கு வலுவ+ட்டவும், சிறுநீரிலும் நித்திரையிலும் விந்து வெளிவருவதைத் தடுப்பதற்கும் VD (Venereal disease) AIDS (Acquired immune deficiency syndrome), ( விரை வீக்கம் (Hydrocele) எதுவாக இருந்தாலும் டாக்டர் நாயரை அணுகுங்கள். – இருபத்தைந்து ரூபாய் ஆலோசனைக்கு”.

சுவரொட்டி நான் சில கிழமைக்கு முன்பு பார்த்த புள்ளிவிபரத்தை நினைவுக்கு கொண்டுவந்தது,

தமிழ் நாட்டில் – 18,276 பேருக்கு AIDS எனப்படும் நோய் உள்ளது. இது மொத்தமான இந்திய எண்ணிக்கையில் 46வீதமாகும். சென்னையில் மட்டும் – 6060 பேர், இதில் ஆண்கள் 4591 பேர்.

தமிழ்நாட்டில் நிலகிரி மாவட்டத்தில் மிகக் குறைந்தவர்கள் (39பேர்) பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் வாழ்ந்த எனக்கு இவை அதிர்ச்சியளித்தன.

தமிழ்நாட்டின் ஜனத்தொகை இந்தியாவோடு ஒப்பிடும்போது 6-7வீதம் மட்டும்தான். எதற்காக 46வீதம் AIDS இருக்க வேண்டும்?

வறுமையோ, சுகாதார வசதி இன்மையோ காரணமானால் பிகார் உத்தர பிரதேசம் தமிழ்நாட்டை விடப் பின்தங்கியவையே?

நகரமயமாக்கம் காரணம் என்றால் ஏன் மும்பாய், கல்கத்தா சென்னையை விட அபிவிருத்தி அடைந்த நகரங்களே?

இங்கு தானே சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ளன. ஆனாலும் இங்கு ஏயிட்ஸ் குறைவாக உள்ளதே?

மருத்துவ வசதிகளுக்கும் சென்னையில் குறைவில்லையே. பாரிய ஆஸ்பத்திரிகளும் அவற்றின் தொழில் நுட்பவசதிகள் எல்லாரும் அறிந்தவை.

வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் பிரதேசங்கள் கோவா மும்பாய், போன்றவை பாதிப்புக்குள்ளாகவில்லையே?

பலவிதமாகக் கணக்குகளைப் போட்டுப் பார்த்தேன். தனிநபர் ஒழுக்கத்தை எடுத்துரைக்கும் திருக்குறளும், சிலப்பதிகாரமும் பிறந்த நாட்டில் ஒழுக்கக்குறைவு என சொல்ல முடியாது.

காரணத்தை அறிந்து கொள்ள ஆட்சியாளரிடமே கேட்பது என முடிவு செய்துவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நன்றியுடன்

நடேசன்

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

2 Responses to முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு,

 1. chollukireen சொல்கிறார்:

  கேள்வி, நல்ல கேள்வி. யாரோ பதிலுரைப்பர்?hejdhdhacd.

 2. uneducated சொல்கிறார்:

  நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும்
  ஒரு மலரில் மனது வைத்து
  உறவு கண்டால் நல்ல சுகம் இருக்கும்…….
  ராமனுக்கு ஒரே மனது நல்லவர்க்கு ஒரே உறவு.
  ( நன்றி: கவியரசர் கண்ணதாசன் “தேனும் பாலும்” என்ற படத்திலிருந்து..1971)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.