கத்தோலிக்க திருச்சபையும் பாலியல் வன்முறையும்

நடேசன்
அவுஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் கடந்த எண்பது வருடத்தில் 620 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கை தயாரித்திக்கிறார்கள். இது அவர்களது புள்ளிவிபரம். இவர்கள் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்து விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டவையும் இதில் அடங்கும் என நினைக்க விரும்புகிறேன்.

அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பத்திற்கு ஒன்று மடடுமே பாதிககப்பட்டவர்களால் வெளி சொல்லப்படுகிறது. இப்படி பார்த்தால் ஆறாயிரத்துக்கு மேற்பட்வர்கள் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு உடபடுத்தப்பட்டிப்பார்கள்.

இதைவிட விக்டேரியபொலிஸ் அறிக்கை ஒன்று தயாரித்து பாராளமன்றத்திற்கு கொடுக்கவிருக்கிறார்கள். இதன் பிரகாரம் நாடு தழுவிய ரோயல் கமிசன் வைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது..

அவுஸ்திரேலியாவில் மட்டும் கத்தோலிக்க திருசபையினர் இப்படி செய்துவிட்டார்கள்? மற்ற நாடுகளில் இவை நடக்காமல் இருக்குமா?

அமரிக்காவில் பலர் தொடர்சியாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களுக்கு இழுக்கப்படுகிறார்கள் .

இந்த நிலையில் இலங்கை இந்திய போன்ற நாடுகளில் உள்ள கததோலிக்கசபைக்கு எதிராக குற்றம் சாட்டப்படவில்லை என்பதால் இவர்கள் எந்த விடயங்களில் ஈடுபடாதவர்கள் என்பது அர்த்தமா?

எனக்குத் தெரிந்த வரை பலர் இலங்கை செமினறிகளில் இருந்து இடையில் வெளியேறியுள்ளார்கள். ஆனால் எமது நாட்டில் யாராவது பாதிரி ஒருவர் மேல் குற்றம் சாட்டமுடியுமா?

எமது நாடுகளில் ஆண் சிறுவர்களில் குற்றமிழைக்குப்படும் போது சமுகம் பொருட்படுத்தப்படுவதில்லை .கற்பு என்பது ஆணுக்கு தேவையில்லை அத்துடன் ஆணில் பாலியல் வன்முறையால் உடல்ரீதியான மாறறம் ஏற்படாது என்ற கருத்தாக்கமே இதற்கு அடிப்படைக்காரணம். மனரீதியான பாதிப்பை கீழத்தேய சமுகம் காலம் காலமாக புறக்கணிப்பது வரலாறு.

கத்தோலிக்க திருச்சபையினர் திருமணமாகதவர்கள்தான் பாதிரியாக வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கும்வரை இப்படியான விடயங்கள் நடைபெறும். இயற்கைக்கு மாறான இந்த துறவறம் பலருக்கு ஒரு போர்வை போன்றது. போர்வைக்குள் காலம் காலமாக தனிமனிதக் குறைகள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது.

“கத்தோலிக்க திருச்சபையும் பாலியல் வன்முறையும்” அதற்கு 4 மறுமொழிகள்

 1. பரிசுத்த வேதாகமம் ஒரு போதும் திருமண பந்தத்தை வெறுக்கவோ அல்லது தடை செய்யவோ இல்லை என்பதற்கு பைபிளில் இருந்தே ஓர் ஆதாரம். புதிய ஏற்பாட்டில் 1வது தீமோத்தேயு 4வது அதிகாரம் வசனங்கள் 1இலிருந்து 4வரை பின்வருமாறு கூறுகின்றது.

  ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

  In English:

  1Now the Spirit speaketh expressly, that in the latter times some shall depart from the faith, giving heed to seducing spirits, and doctrines of devils;2Speaking lies in hypocrisy; having their conscience seared with a hot iron; 3Forbidding to marry, and commanding to abstain from meats, which God hath created to be received with thanksgiving of them which believe and know the truth. 4For every creature of God is good, and nothing to be refused, if it be received with thanksgiving

  1. “மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று பைபிள்தானே பதிலளிக்கிறது. (2 பேதுரு 1:21) இதை இப்படி விளக்கலாம்: ஒரு மேனேஜர் தன் செக்ரெட்டரியிடம் ஒரு கடிதத்தை எழுதச் சொல்கிறார். தன் எண்ணங்களையும் அறிவுரைகளையும் அந்த மேனேஜர் சொல்லச் சொல்ல அந்த செக்ரெட்டரி எழுதிக்கொள்கிறார். அப்படியானால் அந்தக் கடிதம் யாருடையது? அது உண்மையில் மேனேஜருடையது, செக்ரெட்டரியுடையதல்ல.
   அவ்வாறே, பைபிளை மனிதர்கள் எழுதினாலும் அதிலிருப்பது கடவுளுடைய செய்தி, மனிதர்களுடைய செய்தி அல்ல. எனவே, முழு பைபிளும் உண்மையில் “தேவ வசனமாகவே” இருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:13.

   பைபிளை எழுதி முடிக்க 1,600-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பிடித்தன. அதை எழுதியவர்கள் வெவ்வேறு காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள், அதுவும் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர் விவசாயிகளாக, மீனவர்களாக, மேய்ப்பர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தீர்க்கதரிசிகளாக, நியாயாதிபதிகளாக, ராஜாக்களாக இருந்தார்கள். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா ஒரு மருத்துவராக இருந்தார்.

   இப்படி வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் பைபிளை எழுதியிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அது
   முரண்பாடில்லாமல் ஒத்திசைவாகவே இருக்கிறது.“

   பைபிளை உபயோகிப்பது எப்படி?
   உதாரணத்திற்கு, “2 தீமோத்தேயு 3:16” என்பது தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தில், 3-ம் அதிகாரத்திலுள்ள 16-ம் வசனத்தைக் குறிக்கிறது.

   உங்கள் மீது அக்கறையுள்ள சிலர், நீங்கள் பைபிளைக் கற்றுவருவதைப் பார்க்கும்போது இந்தப் படிப்பை நிறுத்திவிடுமாறு உங்களை வற்புறுத்தலாம். உங்களுடைய மத நம்பிக்கைகளை நீங்கள் மாற்றிக்கொள்வீர்களோ என அவர்கள் பயப்படலாம்.

   1. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.
    அண்மையில் ஒரு பத்திரிகையில் நான் வாசித்த விடயம்: உலகத்திலே அதிகமாக அச்சிடப்பட்ட புத்தகம் பைபிள் தானாம்.

 2. The union of a man and a woman as husband and wife according to the standard set out by God. Marriage is a divine institution, authorized and established by GOD in Eden.
  ஆதியாகமம் அதிகாரம் 2 : வசனம்: 18
  “பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”
  And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an help meet for him.
  The first human wedding was performed by God, as described at Genesis 2:22-24
  22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
  And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man.

  23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
  And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.

  24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
  Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: