நாமும் தென்இந்திய அரசியல்வாதிகளும்

 தமிழீழ குரல் எழுப்புகிறார்கள். அமைதியாக இருந்த இலக்கிய வாதிகள் சினிமாக்காரர்கள் சுச்சலிடுகிறார்கள். இந்த நிலையில் 2002 எழுதிய கட்டுரை பிரசுரிக்கபடுகிறது
புதுக்க எழுத வேண்டிய அவசியம் இலலை பழயகள். புதிய பிளாவில்,

நடேசன்

நான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாலாம் உலக தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடந்தது, அப்போது நடந்த நிகழ்வுகள் என் மனத்தில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது.

பதினொருவர் இறந்த நாளுக்கு முதல் இரவு மூவர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு நான் சாட்சியாகினேன். சுமார் 8மணியளவில் மீன்களைப் போல் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்த்தி ஆஸ்பத்திரி வீதியால் வந்து கொண்டிருந்தது. வீதிக்கு மேலாக செல்லும் மின்வயரில் ஊர்தி முட்டியவுடன் மின்சாரவயர் அறுந்தது, அந்த இடத்திலே மூவர் இறந்தார்கள். வயர் அறுந்தபோது மின் வெளிச்சம் அணைந்தாலும் நான் நின்ற இடத்துக்கு அருகில் தரையில் போட்ட மீன் போல் ஒருவர் துடித்து இறந்தது என்னால் பார்க்க முடிந்தது.

அதிர்ச்சியுடன் வீடு சென்றேன்.

அடுத்தநாள் மகாநாட்டின் கடைசிநாள். ஞானம் மாஸ்ரரிடம் பௌதிகம் பாடம் படித்துவிட்டு நாங்கள் ஐந்து பேராக மாலைநேரம் மகாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்ல எண்ணினோம். ஞானம் மாஸ்டர் மகாநாட்டு குழுவில் ஒருவராக இருந்ததால் வகுப்பு சீக்கிரம் முடிவடைந்தது.

சைக்கிளை மணிகூட்டு கோபுரத்தருகே வசிக்கும் எனது நண்பனின் வீட்டில் விட்டுவிட்டு அவருடன் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கிச் சென்றோம். மக்கள் கூட்டம் எங்கும் நிறைந்து வழிந்தது, வடமாகாணத்தில் எங்கும் நிறைந்து வழிந்தது, வடமாகாணத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் அங்கு வந்துவிட்டார்களா என நினைத்தேன்.

முனியப்பர் கோயில், புல்லுக்குளம் போன்ற பகுதிகள் எமக்குத் தண்ணிபட்ட பாடமானதால் விரைவாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்தோம். மண்டபத்தின் முன்னிலையில் மேடைபோடப்பட்டிருந்தது, நாங்கள் அந்த மேடையில் பின்னால் நின்றோம்.

மேடையில் பலர் பேசினார்கள். ஆனால் அமிர்தலிங்கம் பேசும்போது மக்கள் ஆர்ப்பரித்தார்கள். அமிர்தலிங்கம் பேசி முடித்தவுடன் ஒருவர் மேடையில் ஏறினார். அவரை ஜனார்த்தனம் என மக்கள் கூறினார்கள்.

இரா ஜனார்த்தனம் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா கொடுக்கவில்லை என்ற விடயம் எமக்கு முன்பு தெரிந்திருந்தது.

எங்களுக்குப் பக்கத்தில் இருந்த ஒருசிலர் இவர் வள்ளத்தில் வந்தார் எனக் கூறினார்கள்.

ஜனார்தனம் எனநினைத்தவர் வேறு ஒரு இஸ்லாமிய பேராசிரியர் என்பது பின்பாகத்தான் தெரிந்தது

ஜனார்த்தனம் பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணாடிகள் நொருங்கும் சத்தம் கேட்டது. அத்துடன் கண்ணீர் புகை குண்டுகளும் எம்மத்தியில் விழுந்தன. சுடுகிறாங்கள், சுடுகிறாங்கள், நிலத்தில் படுங்கள் என பலர் சத்தமிட்டார்கள்.

நான் படுத்ததால் எனக்கு மேல் குறைந்தது பத்துப் பேராவது படுத்திருப்பார்கள்.
திடீரென்று லைட்டுகள் அணைந்தன.

எங்கும் கூக்குரலும் அலறலும் எதிரொலித்தது, இருட்டில் நடப்பது தெளிவாகத் தெரியவில்லை. எனக்கு மேல் படுத்தவர்கள் எழும்பிய பின்பு நானும் எழும்பி கண்ணீர்ப் புகையில் எரியும் கண்களை கசக்கியபடி பார்த்தேன். மண்டபத்தின் முன்பகுதியில் நான் உள்ள இரும்பு கேட்டால் அமைக்கப்பட்ட பகுதியில் எவரும் இல்லை. கேட்டை கடந்து செல்ல முயற்சிக்கும் போது கேட்டின் மேல் இருவர் சடலங்களாக தொங்குவது தெரிந்தது, இது என்றோ ஒருநாள் பார்த்த ஆங்கில சண்டைப்படத்தை நினைவ+ட்டியது.

மின்சாரவயர் ஒன்று பக்கத்தில் கிடந்தது,

கேட்டிலும் மின்சாரம் பாயலாம் என்று நினைத்து கேட்டின் மேல் பாய்ந்து யாழ்ப்பாண தபால் நிலையம் நோக்கி ஓடினேன்.

என்னுடன் வந்த நண்பர்கள் எங்கு சென்றார்களோ எனக்குத் தெரியாது. தபால் கந்தோரில் தாயும் சிறுமியும் என்னுடைய கையைப் பிடித்தபடி சேர்ந்து கொண்டார்கள். அவர்களையும் இழுத்துக் கொண்டு கொட்டடிப் பக்கமாக ஓடினேன். அக் கொட்டடியில் திறந்து இருந்த வீட்டினுள் அவர்களை இருந்துவிட்டுப் போகும்படி கூறிவிட்டு, தட்டாத் தெரு சந்தியை நோக்கி ஓட்டமாக வந்துவீட்டை அடைந்தேன்.

அடுத்தநாள் காலை சைக்கிளை எடுக்க மீண்டும் சென்றபோது எம்மில் சிலரோடு ஒரு சிறிய விசாரணை நடத்தினோம்.
வீரசிங்கம் மண்டப முன்னிலையில் செருப்புகள் மலைபோல் குவிந்திருந்தது, பலருடன் பேசியதில் கிடைத்த விபரமாவது: இரா ஜனார்த்தனனை மேடையில் பார்த்தவுடன் DSP சந்திரசேகராவின் கட்டளையின் படி பொலிசார் மேடையை நோக்கி வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் பொலிசார் மீது செருப்புகைள வீசினர். இதைத் தொடர்ந்து பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை மக்களுக்கு எறிந்ததோடு, துப்பாக்கியால் மேல்நோக்கியும் சுட்டார்கள். அப்படியான குண்டு ஒன்று மின்சார வயரை தாக்கியதால் வயர் அறுந்து மின்சாரம் தாக்கி பலர் இறந்தார்கள்.

இந்த விசாரணை முற்றாகச் சரியா எனக் கூறமுடியாது. ஆனால் அரசாங்கமோ, தமிழ் தலைவர்களோ வேறுவிதமாக சொல்லவில்லை. விசாரணை வைக்கவில்லை.

சிவகுமாரன் DSP சந்திரசேகராவை குண்டெறிந்து கொல்ல முனைந்ததற்கும் இந்த தமிழ் ஆராய்ச்சி மகாநாடுதான் காரணமாகும்.

சங்கிலித் தொடராக பல சம்பவங்கள் நடந்தன.

இங்கு குறிப்பிட வேண்டிய இருவிடயங்களாவன:

1. இருபத்தியெட்டு ஆண்டுகளின் பின்னும் அந்த தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டால் தமிழருக்கு கிடைத்த நன்மைகளை இன்னும் தேடுகிறேன்.

2. இரண்டாவதாக இரண்டு நாளும் மின்சாரத்தால் தமிழர்கள் இறந்தனர். முதலாவது நாள் இறந்வர்களைப் பற்றி எவரும் பேசவில்லை. நினைவு கூரவில்லை. கடைசிநாள் இறந்தவர்கள் அரசியலில் முதலீடாகினர்.

இரா ஜனார்தனம் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ஈழமக்களுக்கு இந்திய கரையில் தெரியும் வழிகாட்டும் விளக்காக விளங்கினார்.
இவர்மீது தமிழ்மக்கள் கொண்ட நம்பிக்கையை விளக்க இன்னும் ஒரு சம்பவம் எனக்குக் கூறப்பட்டது. இலண்டனில் இலங்கைத் தமிழர்கள் நிறைந்த கூட்டத்தில் இரா ஜனார்த்தனம் பேசிய போது ஒருவர் எழுந்து ஐயா. வேதாரணியத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய இடம் தரமுடியுமானால் நாம் தமிழ் ஈழம் கண்டுவிடுவோம் எனக் கூறினார்.

பக்கத்தில் இருந்த மற்றவர் கேள்வி கேட்டவரிடம் மிகவும் கேலியாக ”ஏன் காலைகடன் கழிக்க இடம் தேடுகிறீரா” என இரகசியமாகக் கேட்டார்.
இந்தச் சம்பவம் நாங்கள் இந்திய தமிழ் அரசியல்வாதிகளிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விளக்குகிறது.

83ம் ஆண்டின் பின் இவரது இடத்தை பழ. நெடுமாறன் நிரப்பினார்.

87ம் ஆண்டில் வைகோ எம்மனத்தில் புகுந்து கொண்டார்.

 இந்திய நிருபர் கோபாலசாமியைப் பற்றி கூறும்போது இந்திய தமிழ் மக்களிடம் இவருக்கு ஆதரவு இல்லை. கட்டுக்காசு கிடைக்கவில்லை. இவர் ஒரு தெலுங்கன் என விபரித்தார். அப்படி எல்லாம் மட்டமாக நான் சொல்லவிரும்பவில்லை.

மத்திய அரசாங்கத்தில் பங்குபற்றுபவர் எதற்காக அறிக்கைவிட வேண்டும். ஒருவித சலசலப்புமின்றி தமிழ் மக்களுக்கு சார்பாக மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக பல விடயங்களை செய்ய முடியும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரகசியமாகப் பாடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கில் அல்ல இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். தங்கள் குடும்பம், பொருள், ஏன் உயிரையும் கொடுத்தவர்களை எனக்குத் தெரியும்.

இவர்களில் அரசியல்வாதிகளான மூவரைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இந்திரா காங்கிரஸில் MPஆக இருந்த திரு. அன்பரசு 80-87ஆம் ஆண்டுகளில்  தனது டெல்லி உத்தியோக ப+ர்வ வீட்டைக் கொடுத்திருந்தார். பல வட இந்திய தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இத்துடன் பத்திரிகையாளர்கள், மற்ற அரசாங்கத்துடன் பலமட்டத்தில் உள்ளவர்களை சந்திக்க உதவி செய்தார்.

தமிழ்நாட்டில் எம். ஜி. ஆர்காலத்தில் உணவு துறை அமைச்சராக இருந்த சோமசுந்தரம் அவர்கள் PLOT இயக்கத்துக்கு தனது தொகுதியில் முகாம்      இட உதவியது மட்டுமல்ல அந்த முகாமுக்கு உணவு தொடக்கம் பல வசதிகள் செய்து கொடுத்து உதவி செய்தார். இவர் உமா மகேஸ்வரனை எம். ஜி. ஆரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். பல உதவிகளை செய்த இவர் மறைந்த போது நிட்சயமாக பல இலங்கைத் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செய்திருப்பார்கள்.

இவர் அதிசயமான நேர்மையான அரசியல்வாதியாகும்.

கடைசியாக பண்டிட்டி இராமசந்திரன் எம் ஜி ஆருக்கு பக்கவாதம் வந்திபின் காதாகவும், வாயாகவும் வாழ்ந்தார். இவர் ஆலோசனையின்படி, எம். ஜி. ஆர் தனது அலுவல்களைக் கவனிப்பார். இலங்கை அரசியலை மிகவும் தெளிவாக அறிந்தவரில் இவர் ஒருவராகும்.

தமிழ்நாட்டு மக்களிடம் சேர்க்கப்பட்ட நாலுகோடி ரூபாயில் மூன்று கோடியை, LTTE க்கு கொடுக்க வைத்ததற்கு இவரது பங்கும் உண்டு. அரசாங்கத்தால் இந்தக் காசு கோட்டையில் வைத்து கையளிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் வுசுழு வானில் சென்று வாங்கிதைப் படத்துடன் தினமணி பிரசுரித்திருந்தது,

அமைதியாக ஈழத்தமிழ் மக்களுக்கு உதவிய இவர் கொக்கரிக்கவில்லை. விளம்பரப்படுத்தவில்லை.

மற்றவர்கள் ஏன் தங்களை விளம்பரப்படுத்துகிறார்கள் எனப் பார்ப்போம்.

கடந்த 20ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் ஆயுதப் போராட்டம், இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான விடயமாகிவிட்டது. இதை News Worthy Matter என்பார்கள். இதில் விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் சர்வதேச முக்கியத்துவம் அடைந்துவிட்டார்கள்.

இவர்களைப்பற்றி எதிராகவோ, அல்லது சார்பாக எவர் கூறினாலும் பத்திரிகைகளும் வானொலிகளும் முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் தமிழ் நாட்டு மக்களிடம் அதிக செல்வாக்கு இல்லாதவர்கள் எம்மில் குதிரை விடுவது தவிர்க்கமுடியாதது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அறிக்கை விடுபவர்களில் திரு சுப்பிரமணிய சுவாமிகள் மிகவும் முக்கியமானவர்.
சார்பாக அறிக்கை விடுபவர்களுக்கு தமிழக ஊடகங்களைவிட ‘போனஸ்’ ஆக புலம்பெயர்ந்த மக்களும் அவர்கள் ஊடகங்களும் உண்டு. முதலுக்கு வட்டியாக இருந்து பின்காலத்தில் வட்டியே முதலைவிட அதிகமாக இருப்பது போல் புலம்பெயர்ந்தவர்களிடம் இவர்கள் முக்கியம் பெறுவது தவிர்க்க முடியாதது.

அவுஸ்திரேலிய தமிழ் வானொலிகள் நெடுமாறனதும், வைக்கோவினதும் செவ்விகளைப் பலமுறை ஒலிபரப்பின. உலகசாதனையை நிலைநாட்டிவிட்டன. இவர்களுக்கு விளம்பரம் கொடுப்பது பற்றி எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் கொக்கரிக்கும் சேவல்களைவிட, முட்டை போட்ட பல கோழிகள் எம்மனதில் நினைக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.