அன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=339:-2&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46 (Giritharan Comment)

நொயல் நடேசன்
நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் பலதடவைகள் இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்திருக்கிறேன். மேலும் எனது வண்ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு ஆகிய இரண்டு நாவல்களும் இலங்கை அரசியல் விளைவுகளை பின்னணியாக எழுதப்பட்டவை என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை
83 கலவரத்துக்குப் பின்னர் பெரும்பாலான தமிழர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தபோது நான் எனது மனைவியோடு இந்தியா சென்று அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ததோடு சகல இயக்கங்கங்களையும் மற்றும் எனக்குத்தெரிந்தவர்களையும் ஒன்றாக இணைத்து தமிழர் மருத்துவ நிதியத்தை ஆரம்பித்து நடத்திய போது நடந்த சகோதர யுத்தத்தையும் இந்தியப் படைகள் இலங்கைக்கு சென்றதையும் பார்த்துவிட்டு, ஈக்கு கொல்லன் பட்டறையில் என்ன வேலை என்ற தீர்மானத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன். கனடாவில் தற்போது வசிக்கும் பழைய இயக்கத்தினரிடம் எனது கதையை உறுதி செய்யலாம்.

https://noelnadesan.wordpress.com/2011/08/23/254/

புது டில்லியில் இயக்கத்தலைவர்கள் இருக்கும் அசோக் ஹோட்டலுக்கு போய் வரும் இயக்கம் சாராத ஒருவன் நானும் பெயர் கூறவிரும்பாத எனது நண்பனும் மட்டும்தான். அந்த ஹோட்டலில் உமாவோடும் பிரபாகரனோடும் பேசவிரும்பாமல் அவர்களுக்கு கைகொடுக்காமல் வெளியே வந்தேன் (பிரபாகரன் ரெலோவை அழித்த நிகழ்ச்சியை ஒரு நாள் முழுவதும் ஒலிபரப்பில் கேட்டதாலும், எனக்குத் தெரிந்த பலரை ஓரத்த நாட்டில் உமா கொலை செய்ததாலும் ). இதை தற்போது உயிருடன் இருக்கும் செல்வம் எனும் அடைக்கல நாதனிடம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்

இலங்கை, பிரிவினையையோ தமிழ் ஈழத்தையோ ஏற்றுக்கொள்ளாத போதிலும் தவிர்க்க முடீயாமல் தமிழர்கள் வன்முறையை பாவிக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்காக எனது மூன்று வருடங்களை அர்ப்பணித்தவன். எப்பொழுது சகோதர கொலைகளையும் அநுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்களின் கொலையையும் பார்த்ததன் பின்னர், விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திலும் பார்க்க இலங்கை சிங்கள அரசின் இனவாதம் தமிழருக்கு பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்தேன். காரணம் சிங்கள இனவாதத்தோடு பேசலாம். நீங்கள் தொடர்புகள் இருந்தால் தப்பலாம் மேலும் கலவரங்கள் இடைக்கிடைதான் வருகிறது. ஆனால் புலிப்பயங்கரவாதம் காற்றுப்போல் நீக்கமற்றது. சமரசம் செய்யமுடியாதது. எல்லாவற்றையும் விட முக்கியமாக சிங்கள இனவாதம் எல்லைக்குட்பட்டது. ஆனால் புலிப்பயங்கரவாதம் சர்வதேசம் வரை பரவியது. இந்தியாவில் ஒரு முறை எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இருந்தபோது எனது புகைப்படம் ஓமந்தையில் புலிகளின் முகாமில் இருந்ததை எனது உறவினர் மூலம் அறிந்தேன்.

உங்களுக்குத் தெரியுமா? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் அல்ல. இன்னமும் நான் என்னை எழுத்தாளன் என அடையாளப்படுத்துவதும் இல்லை. எழுத்தை ஒரு ஆயுதமாகத்தான் பாவிக்கிறேன். அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் மெல்பனில் இருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச்சேர்ந்த மறைந்த தில்லை ஜெயக்குமாரும் அவரது சகாக்களும்தான். இந்த ஒருங்கிணைப்புக்குழுதான் அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் ஏக பிரதிநிதி ஆகும். நான் படைக்கும் சிறந்த படைப்பு என நான் கருதும் ஒரு நூலை குறிப்பிட்ட ஜெயகுமாருக்கு காணிக்கையாக்க நினைக்கிறேன்.

இலங்கையில் இன முரண்பாடு உள்ளது. அதைவிட கிழக்குமாகாணத்தில் ஒவ்வொருமட்டத்திலும் இந்த முரண்பாடு உண்டு. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்-சிங்கள முரண்பாட்டுக்கு வர்த்தகமும் பின்னணியாக உள்ளது. இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய குடியிருப்பு நிலங்களில் தமிழ் – முஸ்லிம் முரண்பாடுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் காணி தொடர்பான முரண்பாடு உண்டு. இவைகளை இந்த மாவட்டங்களுக்கு சமீபத்தில் பயணம் சென்று அறிந்து கொண்டேன். இவற்றுக்கு வன்முறையற்ற தீர்வைகாண்பது பற்றி சிந்திக்கவேண்டியதும் புத்தி ஜீவிகள் கடமை என்று கருதுகின்றேன்.

இதைவிட மிக முக்கிய விடயம் ஒன்றையும் சொல்ல விரும்புகின்றேன். அதாவது அல்சைமர் வியாதி வந்த தாத்தாவுக்கு பாடசாலைக் காதல்தான் நினைவுக்கு வரும். அது போல் இலங்கையில் தமிழ்ப் பிரதேசம் மட்டுமல்ல சிங்களப் பிரதேசங்களில் மக்கள் மனத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் முப்பது வீதமாக்கிவிட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் வடமாகாணத்துடன் இணைப்பதை விரும்பமாட்டார்கள். இதேபோன்று வடமாகாணம் 9.5% வீதமான இலங்கை நிலப்பரப்பை கொண்டும் 3.5% வீதமான சனத்தொகையையும் கொண்டுள்ளது. இருபது ஆண்டுகளாக இலங்கை செல்லாதவர்களால் இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்ளமுடியாது
இதன் மூலம் உங்கள் இரண்டு பந்திகளுக்கு விடைசொல்லி விட்டேன்.

வெளிநாட்டில் இருந்தாலும் இலங்கையர் என்ற வாதம் வலிமையற்றது. இலங்கை இரட்டை குடி உரிமை இல்லாவிடில் நீங்கள் அன்னியரே. ஓன்பது பாராளுமன்ற அங்கத்தினர்களைக் கொண்ட யாழ்மாவட்டம் நாலு அல்லது ஐந்து அங்கத்தினரை கொண்டதாக மாறும்போது அதையும் சிங்களவர்களின் சதி என கூச்சல்போட முடியாது. எந்த நாட்டிலும் புலம் பெயர்ந்தவர்களுக்கு தங்கள் தேசத்தின் மேல் அக்கறை இருக்கலாம். அவுஸதிரேலியர்கள், கனடியர் இன்றும்; பிரித்தானியாவை தாய் நாடு என நினைக்கலாம். மலேசிய தமிழர்கள் இந்தியாவை நினைக்கலாம். கலாச்சார உணர்வுகள் வேறு. அரசியலில் பங்கு பற்றல் என்பது வேறு.

இந்தியாவால் சாதிக்கமுடியவில்லை என்பது இலங்கையில் உள்ள 75 வீதமான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எந்தத் தீர்வையும் வெளியாரால் திணிக்க முடியாது என்ற அர்த்ததில் கூறப்பட்டது. இலங்கையின் தீர்வு அரசியல் அமைப்புக்கு உட்பட்டே வரவேண்டும். 87இல் பதின்மூன்றாவது சரத்தை இலங்கை கொண்டு வரும்போது ஜெயவர்த்தனாவிடம் மூன்றில் இரண்டு பங்கு பலம் பாராளுமன்றத்தில் இருந்தது. அதைத்தவிர அவரது கட்சிப் பாராளுமன்ற அங்கத்தவர்களது ராஜினாமாக்கடிதம் ஜெயவர்த்தனா வசம் இருந்தது

இந்தியப் படைகள் வந்ததும் 87 இறுதியில் திருகோணமலையில் இருந்து சகல சிங்கள மக்களும் வெளியேறிய பின்பு வட-கிழக்குப் பகுதிகள் தனி நாடாகவிட்டாலும் தற்போதைய சைபிரஸ் அல்லது கொரிய குடாநாடு போன்ற நிலைக்கு உருவாகி இருக்க முடியும். அந்த நிலையை கெடுத்தது விடுதலைப்புலிகளும் பிரபாகரனுமே. என்னைப் பொறுத்தவரை அதன் பின்பு முள்ளிவாய்கால்வரை இறந்த தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்களின் இறப்புக்கு பிரபாகரனே காரணம். தற்பொழுது சகல தமிழ்கட்சிகழும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமூல் நடத்தும் படி நாயா பேயா அலைகிறார்கள்..

நான்தீர்கதரிசி என கூறவில்லை. 87ம் ஆண்டு இந்தியவில் இருந்து நான் வந்த போது மெல்பேண் நகரில்(YMCA)யில எனது நண்பர்கள் கூட்டம் ஒன்றை ஒழுங்கு பண்ணி இருந்தார்கள்.அந்த கூட்டத்தில் பேசிய போது எனது கைகுட்டையை எடுத்து வெளியே காட்டி “ஈழப்போராட்டம் முடிந்து விட்டது. இந்த கைகுட்டைபோல் புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றேன்.” அப்பொழுது என்னை எதிர்த்தவர்கள் இருவர் ஒருவர் இழங்கோ மற்றவர். ஆறுமுகசாமி. இப்பொழுது இதை சொல்கிறேன் ஏன் தெரியுமா? அதன்பிறகு 18 வருடங்கள் ஈழப்போராட்டம என்ற பெயரில் பிரபாகரன்ஆடிய கூத்தை பார்ததுக்கொண்டிருந்தது இந்த சமூகம் என்பது வெட்கக்கேடான விடயம். இநத சமூகத்தில் மிக குறைந்த சிலரில் ஒருவனாக இதை எதிர்த்து குரல் கொடுத்தது என்னை வளர்த்து இலவச படிப்பும் மருத்துவமும் கொடுத்த இலங்கை சமுதாயத்துகு நன்றி கடனாக நினைத்தேன்
பாரதியார் தமிழராக இருந்து இந்தியராக வாழ்ந்தவர். மேலும் அவர் அவுஸ்திரேலியாவுக்கோ கனடாவுக்கோ போகவில்லை. கூடியபட்சம் புதுச்சேரிக்குத்தான் போனார். அவரது எழுத்துக்கள் அவரைப் பாதித்தது. ஆனால் எமது எழுத்துக்கள் எம்மை பாதிக்காத தூரத்தில் இருந்து கொண்டு நாங்கள் இணையம் ஊடாக புரட்சி நடத்துகிறோம் நமக்கு பாரதியார் உதாரணம் சரியாகாது. அவரை இப்போது விட்டு விடுவோம்

சனல் 4 சம்பந்தமான உங்கள் விடயத்திற்கு வருகிறேன் 40,000 என சொல்லியது முதலில் விடுதலைப்புலி ஊடகங்கள். வன்னியில் அரசாங்கத்திடம் இருந்து உணவைப் பெற வண்ணி மக்கள் தொகையை கூட்டி சொல்வது வழக்கம். பின்பு ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி கோடன் வொய்ஸ்; 40,000 எனக்கூறினார். பின்பு 10,000- 40,000 என்றார். யுத்தத்தின் பின்பு இலங்கை சென்று விடுதலைப்புலிகள் இரணுவத்தினர் பொதுமக்கள் முக்கியமான பத்திரிகையாளர்கள் இவர்களிடம் பேசினேன். நிச்சயமாகத்தெரியாவிட்டாலும் எனக்கு அண்ணளவாகத் தெரியும். 40000ஆயிரம் வானத்தில் இருந்து பிடுங்கிய தொகை. வன்னிமாவட்டத்தில் தற்போது கணக்கெடுப்பு நடக்கிறது. உறவுகளை இழந்த குடுப்பங்கள் தங்களது சொந்த தேவைக்காக மக்கள் இறந்த இடங்களில் சென்று பதிவு செய்கிறார்கள். 90 வீதம் இந்த கணக்கெடுப்பு முடிந்த நிலையில் நான் முந்திரிக்கொட்டையாக அதைக் கூற விரும்பவில்லை. காணாமல் போனவர்கள் கிட்டத்தட்ட 2000 ஆகும்.

பாரதப்போர் தொடங்கும் போது கௌரவர்களின் தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மர் இடும் முதல் கட்டளை பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் பிராமணர் பசுக்களை குருசேத்திரத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லுமாறு இருந்தது. ஆனால் நமது பரதேசிகள் செய்தது என்ன? அதைவிட அந்தக்காலத்தில் வெளிநாட்டு தமிழர் செய்தது இன்னும் கொடுமை. அந்த அப்பாவி மக்களை பாவித்து விடுதலைப்புலிகளை பாதுகாக்க முயற்சி செய்ததுதான் அது. முடியாத போது வடிக்கும் கபடமான நீலிக்கண்ணீரை பார்க்கும்போது சம்பிக்க ரணவக்க போன்றவர்களிடம் உள்ள மனிதத்தன்மையில் ஒரு துளிகூட இல்லாதவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் என நினைக்கத்தோன்றுகிறது.

சப்புமால் படையெடுத்த உதாரணம் ஒரு வேதாந்தமான உதாரணம். எமது வாழ்க்கையில் நாம் முக்கியமான கல்வி உத்தியோகம் என வரும்போது வேதாந்தமோ தத்துவமோ பேசமாட்டோம். அறிவுபூர்வமான தரவுகளையும் காலத்தையும் வைத்துத்தான் முடிவு எடுக்கிறோம். மற்றவர்கள் விடயம் என்று வந்தவுடன் வேதாந்தம் பேசுகிறோம். நான் ஒரு விடயத்தில் ஈடுபட்டால் காலம் நேரம் மட்டுமல்ல அது பிழைத்தால் அடுத்த திட்டத்தையும் வைத்துக்கொண்டுதான் வேலையை தொடங்குவது என் வழக்கம்..
இந்த விவாதத்தை இத்தோடு முடிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: