நண்பனின் மரணம் நட்பின் மரணம அல்ல

 

 

காலையில் காப்பியை தந்த மனைவி என் முகத்தை தூக்கி வைத்திருக்கிறீரகள். என்ன பிரச்சனை?

மங்களேஸவரன் இறந்து விட்டார்

பல காலமாக தெரிந்த ஒருவரின் மரணம் இது தான் என  சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

இருவருக்கும் மங்களேஸ்வரன் அறிமுகமானவன் அதுவும் இளம் பிராயத்தில என்னுடன சந்தித்திருக்கிறள். தினம் தினம் இறப்பை சந்திக்கும் வைத்தியரான அவளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.

எனது மன உணர்வுகள் வித்தியாசமானவை

எனது மனத்தில் அந்த இறப்பு  ஆழமானதாக இருந்தது .

 

வாழ்க்கையின் நெடிய பயணத்தில் பல பருவத்தில் பலரை சந்தித்து நட்புக் கொண்டிருக்கிறோம். பலருடைய நட்பு சில காலம நீடிக்கும். சிலரது நட்பு நமது நிழல் போல் தொடர்ந்து வரும். சிலரை  தொழில் முறையிலும் சிலரை கோயில், கொள்கை, அரசியல் என தனித்தனியாக பிரித்து நட்புறவு வைத்து கொள்வோம். மிகவும சிலருடன் மட்டும் மனைவிக்கு பிள்ளைகளுக்கு தெரியாத அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வோம் .இப்படி பல வகையான நட்புகளில் நெஞ்சுக்கு மிகவும் நெருங்கியதாக இருப்பது பாலிய பருவத்து நட்பு இங்கே பொருளாதார சமூக அறிவுசால்  வேறுபாடுகள் தலைகாட்டாது..இந்த நட்பானவர்கள் ஆறுகள் நிலங்கள் மலைகள் கண்டங்கள் என பிரிக்கப்பட்டாலும் நினைவுகளில் மிக அருகில்; இருப்பார்கள். வயதுகள் கூடும்பேர்து மனத்தில அடிக்கடி இரை மீட்கப்படுவதும் இந்த பாலிய பிராயத்து நட்புகளே. ஏன் மனநிலை மரத்து போனவர்கள் கடைசி காலத்தில வாழ்வது இந்த நினைவுகளின் கணகணப்பில்தான.;

 

சிறு வயதில் இருந்தே பழகி தெரிந்த ஒரு நண்பனை இழக்கும் போது எம்மில் ஒரு பகுதியை இழந்தது போல் ஒரு உணர்வு உண்டாகும். மரணம் மட்டுமே எமது பூலோக வாழ்வில்  நிதர்சனமானது என எமது அறிவுக்கு தெரிந்தாலும் உணர்வுகளின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதனால் நெஞசில் ஏற்படும் வேதனையான உணர்வு கறையானைப் போல் அரிக்கும் . பல காலத்துக்குப் பின்பு வெறுமையான ஒரு வேதனையை கொடுத்த மரணம் நண்பன் மங்களேஸவரனது ஆக இருக்கும்.

 

முதுமைக்கு காத்திராமல் அவசரமாக இறந்ததா? இல்லை சிறுபிராய நட்பா? ஏன் என  எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டேன்

 

இறப்பு என்பது இலங்கை தமிழ் சமூகத்தில் பிறந்த எனக்கு புரியாததோ புதுமையானதோ அல்ல. இளம் வயதில் இறந்த பலரது மரண செய்திகள் என்னை வந்தடைந்த போது அந்த மரணத்துக்கு காரணமான மற்ற மனிதர்கள் மேல் என்னால் கோபம் கொள்ள முடிந்தது. ஆத்திரம் ஏற்பட்டு கண்களை மறைத்தது  மங்களேஸ்வரனின் மரணத்தில் சோகம் மட்டும் தனித்து எங்கள் ஊர் ஒற்றை பனைமரம் போல் உறுதியாக நின்று  ஓரம் போக மறுத்தது.

 

காரணம்

 

மண் சோறு விளையாடிய காலத்தில் இருந்து தொடர்நத உறவா?

 

ஒரே வயதில ஊரில் பக்கத்து வீடுகளில் பிறந்து சிறுபிராயததை ஒன்றாக கழித்தாலும் ஒரு வருடம் முந்தி படித்த படியால் யாழ் இந்துக்கல்லுரியல் நான் எட்டாம் பிரிவில் சேர்ந்த போது அங்கே எனக்கு ஒரு பாதுகாவலனாக இருந்ததை மறக்க முடியாது. ஒரு நாள் யாரோ ஒருவன் என்னை கேலி செய்த போது கண் சிவந்தபடி இடது கையால் அவனது கன்னத்தில் விட்ட அறையை இன்னும நினைக்க  வைக்கிறது. அதன்பின் எவரும் என்னை கேலி செய்வதை தவிர்த்துக்கொண்டார்கள். நான் பார்த்த முதல் சினிமா படத்திற்கு  அப்பு உன்னையும் சேர்த்து அழைத்து சென்றது பின் இருவரும் சேர்ந்து போடிங்கில் இருந்து இரவில் திருட்டாக  படம் பார்க்க சென்றதையும் மொக்கன்கடையில் இறச்சி சாப்பிட்டதையும் என் மனத்தில் பொத்தி வைக்கப்பட்ட விடயங்கள். அவசரமும் உணர்சிமயப்படும் உனது சுபாவம் கண்டு நானே சிலவேளை பயந்திருக்கிறேன. இதேபோல் உனது தாரளமான உதவும் தன்மையை நட்புக்காக தலை கொடுத்து உதவுவதை பார்த்து வியந்திருக்கிறேன்.

 

நீ கனடாவிலும் நான் அவுஸதிரேலியாவிலும பிரிந்தாலும் ஒவொருமுறை கனடாவுக்கு வந்த போது உன்னை சந்தித்தும் பேசியும் உள்ளேன். கடைசிப்பயணத்தில் வைத்திய சாலையில பேசிய போது நீ எப்படியும உயிரோடு இருப்பாய். நான் உன்னை அடுத்த வருடம வந்து பார்ப்பேன் என உறுதியாக நம்பியிருந்தேன்.

நண்பனே ,எனது நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு அவசரமாக போய் விட்டாய். இந்த உலகத்தில் வாழும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நிச்சயமாக நீ சந்தோசமாக வாழ்ந்திருப்பாய. அது உனது இயல்பு என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.

உன்னை இழந்த உனது மனைவி பிள்ளைகளுக்கு எனது வார்தைகள் ஆறுதலாகாது. அதிலும் நான் சம்பிரதாயமாக ஈடுபட முயலவும் இல்லை. அவர்கள் இறகுகள் பெற்று உயர பறக்க வேண்டும் என்ற மன நிலைக்கு சீக்கிரமாக வரவேண்டும்  என்பது தான் எனது அவா

நட்புடன்

நடேசன்

“நண்பனின் மரணம் நட்பின் மரணம அல்ல” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: