Monthly Archives: ஜூன் 2011

முருகபூபதிக்கு மணிவிழா

மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள். கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அனலைதீவு மக்களுக்கு மட்டும்

நடேசன் சமீபத்தில் இலங்கை செல்ல முன்பு கனடாவில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் தொடர்புகொண்டார். அனலைதீவில்தான் ஒரு கம்பியூட்டர் வகுப்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதனால் அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும்படி கேட்டார். ஊருக்கு உதவ விரும்புபவருக்கு உதவ நினைத்தபடி இம்முறை அனலைதீவுக்கு செல்;ல முடிவு செய்தேன். ஆறு ஏழு வயதில் ஹெப்பரைரிஸ் என்ற ஈரல் நோய் என்னை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உன்னையே மயல் கொண்டு –பாகம் ஆறு

சந்திரனது மேசையில் அவனது ஆய்வுகளுக்கு உதவும் சஞ்சிகைகள், புத்தகங்கள், ஒலிப்பிரதிகள் என பரவலாக இறைந்து கிடந்தன. வுhரம் ஒருமுறை மேசையை துப்பரவாக வைத்தாலும, வார இறுதியில் மீண்டும் அதேமாதிரி வந்துவிடும். இதனை உணர்ந்து அடுக்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிண்டி “என்ன அவுஸ்திரேலியா கிளினப் டேயா” என்று கேட்டாள். கேள்வியின் கேலியை புரிந்தபடி “யேஸ் மிஸ் பேர்பெக்ட்” … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பத்மநாபாவின் நினைவுகள்

செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும்  ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது. நடேசன் என் எஸ் நடேசன் நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம் பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து

இரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்றுமாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். கலவரத்துக்குச் சிலமாதகாலம் முன்புதான் ஹட்டன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மன்னிப்பை யாசித்துக் கொண்டு……..

நடேசன் நமக்குத் தெரிந்த காலங்களில் நடந்த ஆயுதப்போராட்டங்களில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கும். பாலஸ்தீனம், வியட்னாம் போராட்டங்களில் ஆண்களுக்கு பெண்களின் பக்கபலம் இருந்தாலும் ஒரு சில உதவியான பங்கேற்பாக மட்டுமே இருந்தது. காரணம் சமூகத்தின் உற்பத்தியும் உருவாக்கமும் பெண்களில் இருந்து தொடங்குவதால் பெண்கள் நேரடி அழிவில் இருந்து காலம் காலமாக பாதுகாக்கப்பட்டனர். இலங்கைத் தமிழ் போராட்ட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆபத்துக்குதவாப்பிள்ளை

கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன் 00 ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் புலம்பெயர்ந்த நண்பர் ஒருவர். வந்தவரிடம் ஊரிலிருந்த நண்பர் கேட்டார், “இருந்தாற்போல வந்திருக்கிறீங்களே, இந்த வருகைக்கு என்ன காரணம்” என்று. “சொந்த ஊரைப் பார்க்க வந்திருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீட்டையும் எங்களுடைய காணிகளையும் பார்க்க ஆவலாக இருந்தது. அதனால் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார் புலம்பெயர்ந்த நண்பர். இந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக