தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது

–நடேசன்

2010 ஜனவரியில் தினக்குரலில் வெளியாகிய நேர்காணலில் ஒருபகுதி

நேர்காணல் -கவிதா றஜீவன்


கேள்வி:- நீங்கள் ஒரு மிருகவைத்தியராக இருந்து கொண்டு எப்படி உங்களால் இலக்கியத்திலும் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது:.

புதில் நான் அரசியல் ரீதியாக சில வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது ஒருகட்டத்தில் அதைத் தொடர முடியாது போக பத்திரிகையை அரசியல் ஆயதமாக பாவித்தேன். ஆரசியல் ரீதியாகலான அப்பத்திரிகையில்த்தான்  எழுதத்தொடங்கினேன். அத்துடன் சிறுவயதில் இருந்தே இலக்கிய நூல்களை வாசிப்பதில் எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது;. நான் ஆரம்பத்தில் எழுதியது அரசியல் ரீதியான வரலாற்றுப் பதிப்பு. தொடர்ந்து மிருகவைத்தியம் தொடர்பாக எனது தொழில அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நுல்களையும.; எழுதினேன்.

கேள்வி உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கருதும் உங்கள் படைப்பு பற்றி..?

புதில்:- மாற்றம் என்பதை விட  ஒவ்வொருபடைப்பும் ஒவ்வொருவிதம். உதாரணமாக ‘வாழும் சவடுகள் ‘கிட்டத்தட் நாற்பது ஐம்பது கதைகள்களை இரண்டு புத்தகங்களாக எடுதியுள்ளேன். அது நான் ஆவுஸ்திரேலியாவில் நாட்டில் விலங்கு மருத்துவத் தொழில் செய்த போதும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சேவையாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைக்கொண்டு படைக்கப்பட்ட வித்தியாசமான பகுதி. அதேபோல் ‘உனையே மயல் கொண்டு’  இது நான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழுதியது. இளம் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு வகை நோயால் அவள் சமூகத்தில எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் குடும்ப உறவில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் பாதிப்புகளை என்பவற்றை அடிப்படையாக கொண்டது;. இதற்கு அதிக மருத்துவப் புத்தகங்களை படித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வித்தியாசமான வௌ;வேறுபட்ட அனுபவங்களை பகிர்வவையாக படைக்கப்பட்டிருக்கிறது,

கேள்வி:- இன்று இணையத்தளளங்கள் போன்ற ஊடகங்களின் வருகையால் வாசிப்பு பழக்கம் குறைந்து வி;ட்டது என்று பொதுவாக கருதப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து..?

புதில்:- வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என நினைக்கவில்லை. ஆனால் வாசிக்கினற ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. என்றுதான் கருதுகிறேன். புத்திரிகைகள் புத்தகங்களை வாசிப்பது குறைவாக இருக்கிறது;. அதேநேரம் வலைப்பகுதிகளில் தமக்கு தேவையானவற்றை தேடுபவர்கள் தொகை அதிகரித்து விட்டது. ஊடகம் என்பது ஒருவருக்கொருவர்; உள்ள தொடர்புகளை கைமாறும் விடயம் இந்த வகையில் இளைய தலைமுறை இவற்றை தொடர்ந்து ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது,

கேள்வி. சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு கருத்தரங்கில் அண்மையில் நீங்கள் பங்கு பற்றி இருந்தீர்கள் இவ்விழாவுக்கான உங்கள் வரவேற்பைபு; பற்றி..?

புதில்:- இது ஒரு வரவேற்கதக்க விடயம் . இவ்விழா தொடர்பாக அங்கும் நான் சில விடயஙகளை முன்வைத்தேன் “இலக்கியம் என்பது சிலர் சேர்ந்து பேசிவிட்டு போகும் விடயம் அல்ல.அது மக்களுக்கு பல நன்மைகளை  வழங்கவதக இருக்கவேண்டும். ஏன்னைப்பொறுத்தவரை ஒரு முக்கியமான கருத்து என்ன வென்றால்  இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களோ  அல்லது ஊடகவயலாளர்களோ  சில விடயங்களை பல இடங்களில் கூறத் தவறிவிட்டார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து .ஏனெனில் அந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை வருமுன்பு அதை சொல்லவேண்டும் சிலர் பிழை என்று தெரிந்தும் தவறை செய்திருக்கிறார்கள் சிலர் பயத்தால் பேசாமல் இருந்து விட்டிருக்கிறார்கள் இவை எல்லாம ;சேர்ந்து சாதாரண மக்களை பெரும் இன்னலுக்குள் தள்ளிவிட்டது.. அதனால் இனிவரும் காலங்களில் சாதாரண மக்களுக்கு அவற்றை எடுத்து சொல்லக் கூடியதாக இலக்கியங்கள் அமைய வேண்டும்

ஆத்துடன் தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது அது சிங்கள இனத்தின் இலக்கிய வெளிப்பாடகளுடனும் தமிழ நாட்டு இலக்கியங்களுடனும் சேர்ந்து வளரவேண்டும் அல்லது நாம் கிணற்றுத் தவளைகளாகி இருக்க வேண்டி இருக்கும். இதற்கான முயற்சிகளை இவர்கள் எவ்வளவு தூரம் செய்திருக்கிறார்கள்  என்று எனக்கு தெரியவில்லை.ஆனால இதைசெய்யவேண்டும் என நினைக்கிறேன். அத்துடன் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால்  மக்களுக்கு நன்மை பயக்க கூடிய  இலக்கிய வெளிப்பாடாக இது அமைய வேண்டும ;என்பது எனது கருத்து.

கேள்வி உங்கள் படைப்பகளில உங்களைக்கவர்ந்த  யாராவது எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

புதில்:- தாக்கம் என்று கூறமுடியாது  ஏனென்றால் எனது படைப்புக்களட எல்லாம் எனது தொழில் அனுபவங்களை அடிப்படையாக கொண்டன. ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுததாளன். ஆத்துடன் ஜெயமோகனின் எழுத்துகளை கூர்ந்து வரிப்பேன். காரணம் என்னவென்றால் சாதாரண கதை சொல்லுதல் என்றில்லாமல் எழுத்தாளன் என்பதற்கு அப்பால் அவரது எழுத்துகளில் ஒரு பக்குவ நிலை தென்படுகிறது; அத்துடன் என்னை எழுத்தாளன  ஆக்கிய இருவரை நான் முக்கியமாக குறிப்பிடவேண்டும் . ஆரம்பத்தில் எனது எழுத்துகளை சீரமைத்தவர் முருகபூபதி . அதற்குபின் நான் எழுதிய புத்தகங்களை செம்மைப்படுத்தி  நல்ல நிலைக்கு கொண்டுவந்தவர் எஸ் பொ. இவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

“தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது” அதற்கு 2 மறுமொழிகள்

  1. i am fawser
    i want send to u our magazine
    please send me your postel addres
    thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: