ஓரு சுனாமி தடுக்கப்ப்டது

நடேசன்
ஓக்கம வினாசகரண்ட ஓண என அமெரிக்காவில் சொல்லி விட்டு நாடு திரும்பிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்த் தேசிய அணியிடம் சிறையில் உள்ள சகல விடுதலைப் புலிகளையும வெளியில் விட்டு விட்டு யாழ்ப்பாணத்தை தொழில் நுட்ப பூங்காவாக்குவதாக வாக்களித்தார். இவரது வாக்குறுதியை நம்பிய தமிழ்த் தேசிய அணியினர் சகல தமிழ் மக்களையும சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் படி கேட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தோ அல்லது தாங்களாகவோ பெரும்பான்மை தமிழர்கள் சரத் பொன்சேகாசரத் பொன்சேகாவுக்கு வாக்ளித்து இலங்கைத் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்டி விட்டார்கள்.
புல விடுதலைப் புலிகளின வெளிநாட்டு ஆதரவாளர்களும் சரத்போன்சேகாவில் அனுதாபம் கொண்டவர்களாகவும் அவரது கைதை மகிந்த அராசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலாக காட்ட முயல்வதுடன் சரத் பொன்சேகாவை மிகவும ஜனநாயகவாதியாகவும் காட்டி வருகிறார்கள். இதேவேளையில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச திருவாளர் சம்பந்தனிடம் நீங்கள ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கப்போகிறீர்களா எனக் கேட்டதற்கு இராணுவத் தளபதிகள் கவர்னராகளாகவோ வெளிநாட்டு இராஜதந்திரியாகளாகவோ நியமிப்பது போல்தான் ஜெனரல் ஜனாதிபதியாக வருவது என பதில் கொடுத்து தனது வக்கீல்த்தனத்தை விட வடிகட்டின முட்டாள் தனத்தை வெளிக்காட்டிக்கொண்டார்.
இப்படி இலங்கைத் தமிழ் மக்களாலும் தமிழர் தலைமையாலும் மற்றும் வெளிநாட்டு தமிழராலும் ஆதரிக்கப்பட்ட தற்பொழுது சிறையில் இருக்கும் சரத்பொன்சேகாவின் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்போம்.
சரத் பொன்சேகா இந்த சண்டையை தானே நடத்தியது என கூறி வெற்றிககு சொந்தம் கொண்டாடியதோடு கொழும்பில் மற்றவரகள் குளிர் ஊட்டப்பட்ட அறையில் ரையை தளர்த்திக் கொண்டு இருப்பதாக கூறி மறைமுகமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபயாவை குற்றம் சாட்டினார். இதேவேளையில் சரணடைந்த புலித்தேவன் நடேசன் போன்றவர்களை கோத்தபயா இராஜபக்சாவின கட்டளையின் பேரில் கொலை செய்தாக சண்டே லீடருக்கு கடந்த டிசம்பர் 2009 கூறினார். தற்போபோதை தகவல்களின் படி இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் சரணடைந்தவர்களை ஏற்கும்படி கட்டளை இடப்பட்டிருந்தது தெரியவருகிறது.
இலங்கையில் இராணுவத்தை நிரந்தரமாக நாலு இலட்சமாக அதிகரித்து வைக்க வேண்டும் அதன் மூலம் வட-கிழக்கு பகுதியை இராணுவப் பிரதேசமாக்கி எதிர்காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் கிளர்ச்சி ஏற்படாது தடுக்கவும் நிரந்தரமாக வடக்கில் இரண்டு இலச்சம் படையினரை வைத்திருக்க சரத் பொன்சேகா அனுமதி கேட்டதாக எங்களுக்கு கூறியது வேறு யாரும் இல்லை .
இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச.
யாழ்ப்பாணத்தில் உ;ள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இராணுவ சிப்பாயை நியமிக்க முடியாது என தான் மறுத்ததாக அவர் மேலும் கூறினார்.
இதே வேளையில் யுத்தம் முடிந்தது ஆனாலும சரத் பொனசேகா தளபதியாக இருந்த கடந்த வருடத்தி;ன் கடைசிப் பகுதியில. தனது பிரேதத்தின் மேல்தான் 13வது திருத்தம் அமூல் நடத்தப்படும் என்றும் இவர் அளித்த பேட்டி பத்திரிகைக்கு வர முன்பே அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டது இதன் பின்பு தான் இராணுவத்தினர் எவரும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு இல்லாமல் பேட்டி அளிக்கக்கூடாது என சுற்று நிருபம் பாதுகாப்பு செயலாளர கோத்தபயா இராஜபக்சாவால் அனுப்பப்பட்டது. கடைசியாக ஒட்டகத்தின் முதுகை முறித்த வைக்கோல் கட்டு போல் இராஜபக்ச சகோதரர்களை எதிர்க்க இந்த சுற்று நிருபமே காரணமானது.
விடுதலை புலி ஆதரவாளர்களால் பெரிதும் பேசப்ப்டட செம்மணிப புதைகுழி விவகாரம் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பாக இருந்தது சரத் பொன்சேகா . பாவம் ஓரிடம பழி ஓரிடம் என்பது போல் பழி சுமத்தப்பட்டது ஜானக பெரேராhவின் மேல். செம்மணி புதை குழியின் கடைசிப் காலத்தில்தான் ஜானகா பெரேரா யாழ்ப்பாணம் சென்றார். இதை நான உறுதியாக கூறுவதன் காரணம் பல முறை ஜானகப் பெரேராவை சந்தித்தபோது பல பத்திரங்களை என்னால் பார்க்க முடிந்தது. தவறான ஒருவரை குற்றசாட்டியதால் செம்மணிப் படுகொலை விடயம் உலக அரங்கில் எடுபடவில்லை. இந்த குற்றசாட்டை அக்காலத்தில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வைத்திருந்தால் அது நிருபிக்கப்பட்டிருப்பதோடு இன்னும் புலி இயக்கம் இருந்திருக்க முடியும். புலிகளுக்கு இந்த விடயம் தெரியாமல் இல்லை. புலிகளுக்கு எந்தகாலத்திலும் மனித உரிமையில் அக்கறை இருந்தது இல்லை. இல்லாவிடில் துணுக்காய் இறைச்சிக்கடை என கூறப்பட்ட சித்திரவதை முகாமை வைத்திருப்பாரகளா? விடுதலைப்புலிகள் மணலாறுப் பகுதியில் ஜானகப் பெரேராவால் பாரிய அளவில் தோற்கடிக்கப்பட்டிhர்கள். அதற்கு மாறாக அவமானப்படுத்தி பழி வாங்குவதே அவர்கள் நோக்கமாக இருந்தது.
சரத்போன்சேகாவின் பல விடயங்கள் தற்போது விசாரணையில் இருப்பதால் நான் இங்கு அவற்றை குறிப்பிட விரும்பவில்லை.
இப்படியான சரத் பொன்சேகாவுக்கு சம்பந்தன் -சுரேஸ்- மாவைசேனாதிராஜா கும்பல் ஆதரவு அளித்ததால் எங்களைப் போன்றவர்கள் மகிந்த இராஜபக்சாவுக்கு சார்பாக பிரசாரம் செய்யும நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
நடந்து போன விடயம் இதைப் பேசுவதன் அவசியம் ஏன் என கேட்பவர்களுக்கு சொல்லுகிறேன். அவுஸ்த்திரேலிய (யுடீஊ) ரெலிவிசனில் ஒரு சரத்பொன்சேகாவின் ஆதரவாளர் அவரை இலங்தை அரசாங்கம் நடத்தும் விதத்தை கூறி கவலைப்பட்டார். அப்போது ஆவுஸ்த்திரேலிய ஜேனலிஸ்ற், “அவரது மேல் தமிழர்களை கொலை செய்தது என்ற குற்றசாட்டு உள்ளதே” என வினவிய போது அந்த சிங்கள ஆதரவாளர் சொன்னார். “ வடகிழக்கு தமிழர்கள் எழுபத்தியைந்து வீதமானவர்கள இந்த தேர்தலில் அவருக்கு தான் போட்டார்கள். இதன் மூலம் அவர் மேல் உள்ள மதிப்பை தமிழ் மக்கள் காட்டி விட்டார்கள் “ என்றார்
எனக்கு தலையை சுற்றியது. ஒவ்வொரு இனமும் தனக்கு தக்க தலைவரை தேர்ந்து எடுத்து கொள்கிறது. தமிழர்களின் தலைவிதி அவர்கள் எப்பொழுதும் கொலைகாரர்களின் தலைமையை விரும்புகிறார்கள். சில அமரிக்க பெண்கள் சிறையில் இருக்கும் சீரியல் கொலைக்காரர் மேல் காதல் கொள்வது போல்
சரத் பொன்சேகா என்னைப பொறுத்தவரை ஜனாதிபதியாக வந்திருந்தால் சிங்கள பிரபாகரனாக நடந்திருப்பார். சரத்; பொன்சேகாவினால் விளையாட இருந்த விளையாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால பிரபாகரனது செயல்களும தவறுகளும் சிறு பிள்ளை விளையாட்டாக இருந்திருக்கும். நல்ல வேளையாக ஒரு சுனாமி; தடுக்கப்பட்டது. அது கூட சாதாரண சிஙகள பாமர மக்களால் தான் நடந்தது.
இந்த நேரத்தில கண்டிய இராச்சியத்தில் சிறையில் இருந்த ரோபேட் நொக்சின் வார்த்தை நினைவுக்கு வருகிறது.
“வயலில் வேலை செய்யும் ஒவ்வொரு சிங்கள விவசாயின் உடலின் மேல் உள்ள சேற்றைக் கழுவிட்டு பார்த்தால் ஓவ்வொருவரும் அரியணையில்; இருக்க தகுதி பெற்றவர்கள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: