
பீட்டர் பேர்சிவல் நாவலருக்கு ஆங்கிலம் கற்பித்தார். சென்னையில் தமிழ் பேசமட்டும் தெரிந்த பீட்டர் பேர்சிவலுக்கு தமிழ் கற்பித்தார் .
கனகி புராணம்
அக்காலத்திலும் இக்காலம்போல் , தனிமனிதர்களை அவதூறு செய்யும் எழுத்தாளர்கள் , புலவர்கள் இருந்தார்கள். அப்படியான ஒருவரே நட்டுவனார் சுப்பையனர். அவர் கனகி என்ற விலைமகளிடம் யார் போனார்கள் என்று பாடல்கள் பாடியிருக்கிறார் – அவற்றில் பல துலைந்துவிட்டன.
அதில் ஒரு பாடல் ஆறுமுகம் என்ற ஆறுகால்மடம் வெள்ளாளன் என்றிருக்கு – அந்த ஆறுமுகம், ஆறுமுக நாவலர் என்று சிலர் கதை கட்டி விட்டுள்ளார்கள். பலர் நம்பியுமுள்ளார்கள்.
ஆறுமுகநாவலர் நல்லூரைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியும் ஆறுகால் மடம் , ஆனைகோட்டையருகே உள்ளது – கிட்டத்தட்ட 3 மைல்களாவது தூரமானது . தேவையானவர்கள் கனகி புராணம் படிக்கலாம்.