Vaalum Suvaduhal

நாய் வயிற்றில் பலூன்!

- நடேசன்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான அநுபவங்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்நோக்கும் அநுபவங்கள் - சிலவேளைகளில் படிப்பினைகளையும் கற்றுத்தரும்.

எமது சமுதாயத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியிருப்பதாக குரல் எழுந்து கொண்டுதானிருக்கிறது. அதேசமயம் - பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், ஏற்கவும் ஆண்கள் பின்தங்கிவிடும் சம்பவங்கள் உண்டு.

இதோ இந்தக் கதையை பாருங்கள். அன்று நான் பணிபுரியும் மிருக மருத்துவமனை அமைதியாக இருந்தது. இதற்கும் காரணம் உண்டு. அன்று மெல்பர்னில் பிரபல்யமான இரண்டு குழுக்கள் மோதிக்கொள்ளும் Footy Match. M.C.G. நிரம்பி வழியும் நாள். அன்றைய தினம் M.C.G. க்கு செல்லும் பாதைகள் வாகன போக்குவரத்து நெருக்கடியினால் ஸ்தம்பிதமடைவதுமுண்டு.

வீட்டிலே TVக்கு முன்னால் குறிப்பிட்ட அணிகளின் மோதலைப்பார்த்து ரசித்து குதூகலித்தும் - ஆத்திரப்பட்டும் ரசிகர்கள் தமது பொழுதைப் போக்குவார்கள்.

மருத்துவமனையிலும் TV.யில் குறிப்பிட்ட அணிகளின் மோதல் - ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
எனது நர்ஸ் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவள்- match ல் லயித்துப்போயிருந்தாள். ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது.
இன்னும் பதினைந்து நிமிடங்களில் வெற்றி தோல்வி தெரிந்துவிடும்.

அப்போது அழைப்புமணி ஒலித்தது. என்னுடன் பணியாற்றும் ஸ்ரீவன் கதவைத் திறந்தான்.
ஒரு யுவதி - இருபது வயதிருக்கும். கலைந்த ஆடையுடன் கையில் poodle நாயை ஏந்தியபடி பதட்டத்துடன் காணப்பட்டாள்.

அமைதியிழந்த தோற்றத்துடன் அவள் நின்றாலும் - அவளுக்குப் பின்னால் ஓர் இளைஞன் தயங்கியபடி நின்றான். அந்த முகத்தில் வெட்கத்தின் சாயல் தெரிந்தது.

அவள் மட்டும் உள்ளே வந்தாள். அவள் அவனையும் அழைத்தாள். ஆனால் ஏனோ-அவன் வரத் தயங்கினான். அவளை மட்டும்-நாய்க்குரிய சிகிச்சை நடைபெறும் அறைக்கு அனுப்பிவிட்டு - அவன் வெளியே நின்றான்.

'"நாய்க்கு என்ன பிரச்சினை"'? நான் கேட்டேன்.

""எங்கள் நாய் பலூனை விழுங்கி விட்டது. எனக்குப் பயமாக இருக்கிறது. எப்படியும் அந்த பலூனை எடுத்துவிடவேண்டும்"".
ஏதோ பிறந்தநாள் விருந்திற்காக ஊதிக்கட்டப்பட்ட பலூனைத்தான் விழுங்கியிருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

TVயில் match ல் லயித்திருந்த நர்ஸை அழைத்தேன். அந்த யுவதியிடம் விபரங்களைக் கேட்டேன். அரைமணிநேரத்திற்கு முன்புதான் நாய் பலூன் விழுங்கியதாகவும் அதற்குத் தான் மட்டுமல்ல தன்னுடன் வந்துள்ள Alex உம் சாட்சி என்கிற விபரம் வெளிவந்தது.

நான் சிகிச்சையை ஆரம்பித்தேன். வாசிங்சோடாக் கட்டிகளை நாயின் வாயில் பலவந்தமாகத் திணித்து அதனை வாந்தியெடுக்கச் செய்தேன்.

அதன்பின்பு ஸ்ரீவனை அழைத்து நாயை வெளியே சீமேந்து தரைக்குக் கொண்டு செல்லும்படி பணித்தேன். நாய் சத்தியெடுக்கும். பலூனும் வெளியே வந்து விழும். நாயை ஸ்ரீபனுடன் அனுப்பிவிட்டு அந்த யுவதியுடன் பேச்சுக் கொடுத்தேன்.

'"ஆமாம்.... யாருக்கு Birthday Party - அங்கேதானா - உங்கள் நாய் பலூன் விழுங்கியது?"'

'"டாக்டர், எனது நாய் உண்டது பலூன் அல்ல... அதற்கெல்லாம் காரணம் வெளியில் எதுவும் தெரியாதவாறு நிற்கும் அந்த Alex தான்."'
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் முகத்தையே பார்த்தேன். அதேசமயம் வெளியே ஸ்ரீவன், நாய் எடுத்த வாந்தியில் தடியால் கிண்டி எடுத்தபின் - அது பலூன் இல்லை....!

எனக்குச் சிரிப்பு வந்தது. '"இனிப் பயப்படத் தேவையில்லை - அந்த 'பலூன்' வந்துவிட்டது. நாயைக் கொண்டு செல்லுங்கள்,"' அவளிடம் நாயை ஒப்படைத்தேன்.
'"Bloody Condom இனால் ஒரு அருமந்த match ஐ இன்று பார்க்க முடியாமல் போய்விட்டது"' என்று முணுமுணுத்தவாறு ஸ்டீபன் நர்ஸைப் பார்த்தான்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.