Vaalum Suvaduhal

பதிப்புரை / முன்னீடு

இதனை எழுத என் பேனாவை ஊன்றும் பொழுது எனக்கு, வன்னியசிங்கத்தாரின் ஞாபகம் வருகிறது. அவர் என் மனைவியின் அப்பு. மட்டக்களப்பில் திறமான மாட்டு வைத்தியரெனப் பெயரெடுத்தவர். மாடுகளின் பிரசவத்திற்கு அவரை வெல்லக்கூடிய ஒரு ‘மருத்துவத்தி’ மட்டக்களப்பு மாநிலத்தில் வாழ்ந்ததில்லை என அவர் ஜீவந்தராக இருந்த காலத்திலேயே பாராட்டப்பட்டவர். மாடுகள் சம்பந்தமான வாகடங்களை நுணுகி ஆராய்ந்தவர். அரசாங்க மிருகவைத்தியர்கள்கூட அவருடைய ஞானத்திலே தெளிவைப் பெற்றனர்.

மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களுக்கும் மனித நேயத்திற்கும் மகத்தான ஓர் உறவு உண்டு என்பதை வன்னியசிங்கத்தார் எண்பித்து வாழ்ந்தார். பல்லாண்டுகள் கழித்து அதே மனித நேயத்தினை நடேசனுடைய இந்த இலக்கியத்தில் அநுபவித்துத் திளைக்கின்றேன்.

மனித டாக்டர்கள் பலர் அவுஸ்திரேலியாவிலே கூட மனித நேயங்களை இழந்தும் தொலைத்தும் பணம் பண்ணுவதைக் கண்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர்; மகப்பேறு வைத்தியத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். விரைவுப் பணம் குவிப்பதற்காக சுகப்பிரசவம் சாத்தியம் என்றாலுங்கூட, கருப்பையைக் கீறிப் பிளக்கும் Caesarean operation ஐயெ ஊக்குவிக்கிறார். பணம் பண்ணும் ஆசை மனிதத் தன்மையை விதையடித்து விடுமா? உண்மையில்,அந்தச் சோகத்தின் படுதாவில் இந்த நு}லை வாசிக்கும் பொழுது, மிருக வைத்தியரான நடேசன், வாழ்க்கையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் மனித நேயம் ஒளிருகின்றது என்பதை மகா இயல்பாகபாகக் காட்டும்பொழுது பிரமிப்பு ஏற்படுகின்றது. அவர் தமது அநுபவங்களிலே தொட்டுக் காட்டும் மனிதநேயம், மனித வாழ்க்கையிலே நம்பிக்கை ஊன்றும் மானுடப் பணியாகவும் மலர்ச்சி பெறுகின்றது.

1989 ஆம் ஆண்டில் முதன் முதலாக நடேசனைச் சிட்னியில் சந்தித்ததாக நினைவு. ஏன் மகன் டாக்டர் அநுரவின் நண்பன் என்ற முறையில் அறிமுகமானார். அறிமுகமான அன்று, அவர், மெல்பேன் நகருக்கு புலம் பெயர்ந்து செல்கின்றார் எனவும் அறிந்தேன். புpன்னர், அங்கிருந்து, தமிழருடைய சமூக வாழ்க்கையிலும் அக்கறையுள்ளவராக வாழ்வதை அறிந்து மகிழ்ந்தேன்.

அவுஸ்திரேலியாவில் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வெளிவரும் தமிழர் சஞ்சிகை ‘உதயம்’ என்பது உண்மை. அதன் பிரசுரத்திற்கான ஊக்க சக்திகளுள் முக்கியமானவராக நடேசன் செயற்படுவதை நான் அறிவேன். ‘உதயம்’ முன் வைத்த அரசியல் பார்வையை நான் ஏற்கவில்லை. நிராகரித்தவன் என்று கூடச் சொல்லலாம். இருந்த போதிலும், அறிவு நாகரிகத்தை பேணும் வகையில், பத்திரிகை தர்மங்கள் பலவற்றை மதித்து ‘உதயம்’ வெளிவருகின்றது. உதயத்தின் தமிழ்ச்சேவை என்கிற முகம் எனக்கு உவகை தருவது.

இந்நு}லில் இடம்பெறும் கட்டுரை பலவற்றை நான் முதல் தடவையாக ‘உதயம்’ பத்திரிகையில் வாசித்து மகிழ்ந்தேன். தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரையில் இது நிச்சயமாகப் புதிய அநுபவமாகும். இந்த நு}ல், இரண்டு வேறுபட்டவர்களினால் ஏக காலத்திலே எழுதப்பட்டது போன்ற கோலங் காட்டுகின்றது. உண்மைதான். டாக்டர் என்.எஸ்.நடேசன் என்கிற மிருக வைத்தியர் தனது வைத்திய அநுபவங்களை எழுதுகின்றார். அதே சமயம், நடேசன் என்கிற மனிதநேயனும் புகுந்து கொள்ளுகின்றார். இந்த இரண்டின் சேர்க்கை புது அநுபவமாக மாறுகின்றது. இதனாலும் இந்நு}ல், தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய சுருதியை சேர்க்கின்றது என்று துணிந்து சொல்லலாம்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிய சர்வதேசிய கவனிப்பினை ஈர்ப்பதற்கான முதலாவது குரல் எழுப்பியவன் நான். பெருமைக்காக அல்ல் ஒரு பதிவுக்காகச் சொல்கிறேன். தமிழ் இலக்கியத்திலே புலம் பெயர்ந்தோருடைய அநுபவங்கள் புதிய இலக்கியம் படைப்பதற்கான ஊக்கத்தையும், உந்துதல்களையும், இலக்கிய வடிவங்களையும் அருளுமென நம்பினேன்.

‘வாழும்; சுவடுகள்’ தமிழுக்கு புதிய சங்கதியைக் கொண்டு வந்து சேர்க்கின்றது. இதில் இடம்பெறும் ‘நடுக்காட்டில் பிரேத பரிசோதனை’, அகதி அந்தஸ்துக் கேட்ட பெருநண்டு’ ஆகிய இரண்டும் குமுதம் ‘யாழ் மணத்தில்’ பிரசித்தமாகி, சர்வதேசத் தமிழ்ச் சுவைஞரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. இந்நுல் பெரிதும் வரவேற்கப்படும் என்பதன் நன்னிமித்தமாக இதனை அர்த்தப்படுத்துகிறேன்.

புதிய இலக்கிய வடிவங்களில் ஒன்று creative essays. வியாசம் போன்றும் தோன்றும்: அதே சமயம் படைப்பிலக்கியத்திற்குரிய உணர்வுகளும் இலட்சணங்களும் புகுந்து கொள்ளும். இந்த நு}ல் இப்புது வடிவமே புனைந்துள்ளது.

நடேசனின் இந்தப் புதிய இலக்கிய முயற்சி நு}லுருவில் வெளிவருதல் வேண்டும் என்று நான் பல சந்தர்ப்பங்கறிலும் அவரை வற்புறுத்தினேன். ஏன் வற்புறுத்தல்களையும் ஆக்கினைகளையும் தாங்காது இதனை மித்ர வெளியீடாக வெளியிட அனுமதி தந்தாரேர் நானறியேன்.

இருப்பினும் புலம்பெயர்ந்தோர் படைக்கக்கூடிய புதிய இலக்கியங்களின் தொனிப் பொருளை உலகளாவிய தமிழர்களுக்குச் சொல்லும் முதனு}ல்களுள் ஒன்றாக அமையும் ‘வாழும்; சுவடுகள்’ என்ற நு}லுக்கு மன மகிழ்ச்சியுடன், இந்த முன்னீடை வழங்கி, நடேசனின் இலக்கிய முயற்சிகளை ஆசீர்வதிக்கின்றேன்.

எஸ். போ.

1/23 Murra Street
Eastwood 2122
Australia
Ph: 98582567


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.