Vaalum Suvaduhal

மாத்திரையில் மாற்றம்

- நடேசன்

நான் இரவு வேலை முடித்துக்கொண்டு எனது வைத்தியசாலையின் கதவுகளை மூட எத்தனிக்கும் போது ரெலிபோன் மணி அடித்தது. மனதுக்குள் திட்டிக்கொண்டு டெலிபோனை எடுத்தேன். திருமதி. அப்போஸ் அடுத்த முனையில் இருந்து, ''ரோமி எனது மைக்கிரேன் மாத்திரையை விழுங்கிவிட்டது. என்ன செய்யலாம் டாக்டர்?''

''எவ்வளவு நேரம் இருக்கும்''
''பத்து நிமிடம்''
''உடனே கொண்டு வாருங்கள் '' என்றேன்.
நான் காத்திருந்தேன். 15 நிமிடம் சென்றபின் ரோபியுடன் திருமதி அப்போஸ் அழைப்புமணியை அழுத்தினாள்.

நான் என்ன மருந்து என கேட்டுவிட்டு. pழளைழniபெ உநவெசந என்னும் இடத்துக்கு டெலிபோன் செய்து ஏதாவது மாற்று மருந்து இருக்கிறதா இதற்கு எனவும் மேலும் என்ன பாதிப்பை நாயில் உருவாக்கும் எனவும் வினவினேன். அங்கு உள்ளவர்களுக்கு நாயில் என்ன பாதிப்பு உருவாகும் என தெரியவில்லை.

நான் டெலிபோனை வைத்துவிட்டு ரோபியைப் பார்த்தபோது ரோபி ரபர் பந்து போல் துள்ளியது. திருமதி. அபோசால் நாயைப் பிடித்துக்கொள்ள முடியவில்லை.

மருந்து மூளையைப் பாதித்திருக்கிறது என எனக்கு அனுமானிக்க முடிந்தது. நானும் திருமதி அபோசுமாகச் சேர்ந்து ரோபிக்கு மயக்க மருந்து கொடுத்தோம். அடுத்தநாள் ரோபி குணமாகி வீடு திரும்பியது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின் எனது நர்ஸ் ரெலிபோனைத் தந்துவிட்டு, யாரோ டாக்டரிடம் பேச வேண்டுமாம் என்று சொன்னாள்.

நான் ஹலோ எனக் கூறியதுதான் தாமதம், ஒரு பெண் தான் வழக்கமாக Morning after pill எடுப்பதாகவும் இன்று தான் வாந்தி எடுப்பதாகவும் கூறினாள். நான் எதுவும் பேசத் தொடங்கமுன் திருப்பி ஒரு மாத்திரை எடுக்கட்டுமா? என கேட்டுவிட்டு தனது குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் எல்லாவற்றையும் மட மட எனக்கூறினாள்.

ஐந்துநிமிடம் வரை எனக்கு பேசுவதற்கு இடைவெளி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சொன்னேன், ''நீங்கள் பிழையான டாக்டரிடம் பேசுகிறீர்கள்''

உடனே பலமுறை மன்னிப்புக் கேட்டாள். மனிதர்களின் மாத்திரைகளை நாய்கள் சாப்பிட்டது போல் இதுவும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என சிரித்துவிட்டேன்.

பின்னர் ஒரு மருத்துவமாத இதழ் படித்தபோது அது இன்னும் பலமடங்கு சுiவாயக இருந்தது.

ஒரு வயதான தம்பதிகள் வைத்தியரிடம் சென்று வைத்திய ஆலோசனை பெற்றார்கள். இதில் பெண்மணி HRT எனப்படும் Hormone Replacement Therapy யில் இருப்பவர். அடிக்கடி வைத்தியரிடம் போகவேண்டி இருக்கும்.

பெண்மணியின் ஆலோசனையை முடித்துவிட்டு டாக்டர் ஆணிடம் எப்படி உங்கள் வாழ்க்கை எனக் கேட்டபோது, ஆண் ''எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் எனது மார்பகங்கள் பெரிதாகின்றன"" எனக் கூறினார்.

டாக்டர் ஆச்சரியத்துடன் அறுபது வயதில் இது புதுமை. எனக் கூறிவிட்டு ஆணின் உடலைப் பரிசோதித்தார். பரிசோதனையின்போது கூறியது உண்மை எனத் தெரிந்தது. மேலும் ஆணின் கீழ் ஆடையைக் கழைந்து பரிசோதித்தார். அப்பொழுது ஆணின் இடுப்புப் பகுதியில் ஒரு pயவஉh புள்ளியாக இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டுச் சொன்னார், ''உங்கள் மனைவியின் இடுப்பில் இருக்க வேண்டிய HRT (patch) உங்கள் இடுப்பில் ஒட்டுப்பட்டுள்ளது. இதனால்தான் உங்கள் மார்பகங்கள் பெருத்தன.'' ஆணின் முகத்தில் அசட்டுத்தனமான சிரிப்புத் தோன்றியது.

இந்த சம்பவத்திலிருந்து, மனிதனின் மருந்து மிருகங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று மட்டுமல்ல, பெண்ணின் மருந்து ஆணுக்கும் நல்லதல்ல என்பதும் புரிகிறது.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.