|
சுமதி ரூபன்
“வண்ணாத்திக்குளம்” குறுநாவல் 80-83ம் ஆண்டுகளில் எமது நாட்டுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த குறுநாவல் காதலச் சொல்கிறதா? இல்ல அரசியலச் சொல்கிறதா? என்று விமர்சகர்கள் கொஞ்சம் தடுமாறினார்கள். எதைச் சொல்ல வருகிற என்பதை கதை சொல்லி வாசகர்களுக்கு அடையாளப்படுத்ம் தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்ல. காதலும் அரசியலும் எல்லோர் வாழ்க்கையிலும் பின்னிப் பிணந்த ஒன்று முக்கியமாக எமது நாட்டில் அரசியலின் பாதிப்பு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவாகிப்போய் விட்ட ஒரு விடயம். எனவே எந்தப்படைப்பாயினும் அரசியல் காதல் என்பதிலிருநது எந்த ஒரு படைப்பாளியும் தப்பிவிட முடியாது.
வண்ணாத்திக்குளம் சூரிpயன் எனும் ஒரு தமிழ் இளஞனின் ஒரு குறிப்பிட்ட காலததைக் குறித்து நிற்கின்றது. கதை சொல்லி கனமான ஒரு கருவை எடுத்து+ கனமான பல தளங்கள இணைத்து ஒரு கனமற்ற குறுநாவலை வாசகர்களுக்குப் படைத்துள்ளார் என்பது எனது சுருக்கமான விமர்சனம். எந்த ஒரு விடயத்தயும் கதை சொல்லி ஆழமாகப் பார்க்கவில்லை. தனது மனதிற்குள் ஆழமாக வடிவமைதது; விட்டு எழுதும் போது மேலோட்டமாக வடித்விட்டாரோ என்ற அச்சம் எனக்குள்.. அதே வேளை தான் மனக்குள் வடித்த அந்த ஆழமாக கதைவடிவம் வாசகர்கள் படிக்கும் போது அவர்களச் சேர்ந்து விடும் என்று அவர் கணித்திருக்கவும் கூடும் என்று எண்ணுகின்றேன்.
கதை சொல்லி சேகுவேரா என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஜே.வீ.பி யினரின் அரசியல் கொள்கைகள் நோக்கு என்பவற்றையும் அவர்கள் தமிழ் சிங்கள மக்களால் எப்படிப் பார்க்கப் படுகின்றார்கள் என்பது பற்றியும் எழுத்தில் வடித்ததிலும் பார்க்க இக்குறுநாவலை விமர்சனம் செய்த டி.பி.எஸ் ஜெயராஜ் அது பற்றி விளக்கமாக் கூறினார். அத்தோடு முன்னுரையில் படைப்பாளி அதிகப்பிரசங்கித் தனத்தயும்+ மேதாவித்தனத்தை காட்டாமல் சொற் சிக்கனத்டன் படைத்ள்ளார் என்றும் பாண்டித்தியம் நிறைந்த திறனாய்வு கொள்ளும் வித்தகர்கள் ‘இலக்கியமா’? என்று கேள்வி எழுப்பக் கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தக் கேள்வி விமர்சகருக்கே ஏற்பட்டதா என்ற சந்தேகம் எனக்கு. மிக மேலோட்டமாக ஆழமான ஒரு கருவைப் படைக்கும் படைப்பாளியை தட்டிக்கொடுப்பதிலும் பார்க்க விமர்;சனங்கள் வைத்து அவரின் எழுத்i;த ஆழமாக்க விமர்சகர்கள் உதவ வேண்டும்.
படைப்பாளியான நடேசன் நன்றியுரையின் போது மிகவும் அடக்கமாக நான் பெரிய இலக்கியவாதியல்லஇ என்னுடய பல மறக்கமுடியாத அனுபவங்கள குறிப்பாக எழுதி வைத்து+ பல ஆண்டுகளின் பின்னர் நேரம் கிடைத்த போது அதனை ஒரு படைப்பாக்கினேன். இது நிறைவான ஒரு படைப்பு என்று நான் கூறவில்ல என்றும் கூறினார்.
சூரியன் எனும் இக்குறுநாவலின் நாயகன் படைப்பாளி வாசகர்கள் மனதில் ஒரு நன்குணம் கொண்ட+ முற்போக்குத் தனமான அறிவாளியாகத் தொடக்கத்திலிருந்தே காண்பித்து; விட்டுப் பின்னர் சூரியன்இ சித்ரா எனும் சிங்களப்பெண்ணக் கண்டு காதல் வயப்படும் போது அவன் ஒரு பதினாறு வயது இளஞன் போல் சித்தரித்ள்ளார். வண்ணாத்ப்பூச்சி போல்; கண் சிமிட்டும் அவள் அழகில் அவன் மயங்கும் போதே தன் மனதையும் அவளிடம் சூரியன் பறிகொடுதது விடுகின்றான். அ.கந்தசாமி காலம் செல்வம் போன்றோர் தமது விமர்சனத்தில் குறிப்பிட்ட போல் கதையின் நாயகி சித்ரா வெறும் காதல் பதுமையாக வந்து செல்லாமல் சித்ரா மேல் சூரியனுக்குக் காதல் வருவது அவளின் அறிவுபூர்வமான செயலாலோ + பேச்சாலோ என்பது போல் காட்டியிருந்தால் சித்ரா எனும் நங்கை வாசகர்கள் மனதில் ஓரு நல்ல நாயகியாகப் பரிணமித்திருப்பாள்.
இதே வேளை எனக்குள் ஒரு சிறு குழப்பம். சூரியனும் சித்ராவும் இருமுறை சந்தித்க் கொண்ட பின்னர் சேலை வாங்குவதற்கென்று சூரியன் வவுனியா செல்ல முடிவெடுத்த சித்ராவையும் வரும்படி கேட்டுக்கொள்கின்றான். இருவரும் பேருந்தில் சந்தித்க் கொள்கின்றார்கள். வவுனியாவில் கடைத் தெருவில் பிரச்சனை+ இதனால் இருவரும் மீண்டும் பேருநது நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் போது சிங்கள ஆமி சூரியனின் மார்பில் துப்பாக்கியை வைத்து கேள்வி கேட்கின்றபோது அவனக் காக்க எண்ணிய சித்ரா சூரியனைத் தன் கணவன் என்று கூறுகின்றாள். என வாசிப்பின் புரிதலில் இருநது; சூரியனும் சித்ராவும் ஒருவருக்கொருவர் வாயால் தமது காதலக் கூறவில்லயே தவிர +இருவரும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். இருவருக்குமே தெரிந்த ஒன்று இந்த அனர்த்தத்தின் பின்னர் இருவருமாக சூரியனின் இடத்திற்கே செல்கின்றார்கள். சித்ராவின் அண்ணன் ருக்மனிடம் தற்செயலாகக் கடைத்தெருவில் சித்ராவச் சந்தித்ததாக சூரியன் பொய் சொல்கின்றான். ஆனால் விமர்சகர்கள் அனவரும் சித்ரா சூரியனைக் கணவன் என்று கூறிய பின்னர் தான் அவர்களுக்குள் காதல் வந்ததாக விமர்சனம் செய்கின்றார்கள். அத்தோடு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள் “மிஸ்டர் அண்ட மிஸிஸ் ஐயர்” திரப்படத்தில் வரும் ஒரு காட்சியை இந்தக் காட்சியுடன் ஒப்பிட்டும் விமர்சித்தார். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் ஐயரில் ஒரு முஸ்லீம் இளஞனிடம் தெரியாமல் தண்ணீர் வாங்கிக் குடித் விட்டேனே என்று முகத்தச் சுளிக்கும் பிராமணப் பெண் திருமணமானவள். வளர்க்கப்பட்ட முறை வாழ்க்கை முறை எப்படியாயினும் அவளுக்குள்ளும் மனிதநேயம் இருக்கின்ற என்பதை அவள் செய்கை காட்டி நிற்கின்ற. அத்தோடு ஊரின் அனர்த்தங்களில் இருந்து தப்பிச் செல்ல அந்த இளஞனின் உதவி அவளுக்குத் தேவையும் படுகின்றது. ஆனால் வண்ணாத்திக்குளத்தின் நாயகி தன் காதலனக் காக்க அவனக் கணவன் என்கின்றாள். இதைத்தானே அனேக நாயகிகள் செய்வார்கள்;.
மேலும் கலப்புத் திருமணம். சிங்களப்பெண்+ தமிழ் ஆணைக் காதலிக்கின்றாள். பெரும் புயல் ஒன்று வீசப்போவதாக எண்ணி வாசித்தேன். ஒரு வித சலசலப்பும் இன்றி மிகவும் இலகுவாக இரு குடும்பங்களிடமும் இருந் பச்சக் கொடி காட்டி விட்டார்கள். அதிலும் சிங்களக்குடும்பத்தில் மிகமிக எளிதாகக் காட்டி விட்டார்கள். அது கொஞ்சம் கொச்சத் தனமாக இருந்த போல் பட்டது. ஒரு தமிழ் இளஞன் வீட்டிற்கு வருகின்றான். சில காலத்தின் பின்னர் மகளப் பெண் கேட்கின்றான். பெண்ணின் தாயார் சிறி வெட்கம் கூடப்படுகின்றார். அவன் ஒரு தமிழ் இளஞன். அவன் குடும்பமஇ; உறவுகள் எப்படியானவை. மகள் எதிர்காலத்தில் எப்படியான சிக்கல்களச் சந்திக்கப் போகின்றாள் என்ற எந்த வித எண்ணமும் இன்றி பல்கலக்கழகத்தில் படித்த நல்ல வேலயில் இருக்கும் இளஞனக் காதலிக்கும் யாழ்ப்பாணத்த் தமிழ் பெண்கள “மாப்பிள்ள பிடித்துவிட்டாள்” என்ற பதத்தில் விமர்சிப்பது போல்தான் இதிலும் நல்ல படித்த இளஞன் என்பதால் எந்த சங்கோஜமுமின்றி பெண்ணின் பெற்றோர் சம்மதம் கூறியது எனக்குச் சங்கோஜமாக இருந்தது. அடுத்து சூரியனின் குடும்பம். மகன் காதலிப்பது சிங்களப்பெண் என்று தெரிந்த போது தநi;தயின் சில விதண்டாவாத விமர்சனத்தோடு அங்கும் பிரச்சனை முடிகின்றது. காதல் அரசியல் என்று எழுதது சென்று கொண்டிருக்கும் போது மனதில் நிற்கும் மனத்தைத் தாக்கும் சம்பவங்கள் வரப்போகின்ற என்ற எதிர்பார்த்த எனக்குள் பல முறை எழுப்பிப் பின்னர் ஒன்றுமே இல்லாதது போய் விட்டது எனக்குள் பலத்த ஏமாற்றத்தத் தந்தது.
படைப்பாளி இந்த எழுத்து முறையைத்தான் படைப்பு முழுவதிலும் கொண்டு செல்கின்றார். மனித வாழ்க்கை அனர்த்தங்களால் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும் வேளயில் ஒவ்வொரு சிறிய நகர்வும் வாசகர்கள எந்த விதப் பாதிப்பிற்குள்ளும் கொண்டு செல்லாமல் நழுவி நழுவிச் சென்று கொண்டிருக்கின்ற. அனைததுச் சம்பவங்களயும் ஒரு தகவல் தரும் வடிவில் இங்கே ஆமி அடித்தது+ அங்கே பெடியங்கள் தாக்கினாங்கள் என்பதாயும்+ விமர்சகர் காலம் செல்வம் குறிப்பட்டிருந்த போல் புதிதாக ஒரு இடத்திற்கு நாயகன் செல்லும் போது அந்த இடத்திற்கு வாசகர்களயும் அழைத்துச் செல்லக் கதை சொல்லி தவறிவிட்டார். இருந்தும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பல சந்தர்ப்பங்கள் கதை சொல்லிக்குக் கிடத்திருந்தும் அதனச் செய்யாதது வாசகர்களிற்கு படைப்பாளி மேல் ஒரு மதிப்பைக் கொண்டுவந்திருக்கும்.
இப்படைப்பில் வரும் தலமுடி வெட்டும் ஆறுமுகம் எனும் பாத்திரத்தினூடாக பலரின் அரசியல் பார்வைகள படைப்பாளி கொண்டு வந்திருக்க முடியும். தவறி விட்டார். அதே போல் சுந்தரம் ருக்மன்இ காமினி போன்றவர்களயும் ஏனோ வீணடித் விட்டார்.
இனக்கலவரங்கள்இ மாறுபட்ட அரசியல் கொள்கைஇ கலப்புத் திருமணம் போன்ற காத்திரமான தளங்களயும்இ தனது சொந்த அனுபவங்களான மிருகப்பரிசோதனை போன்றவற்றயும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படைப்பாக்கியிருந்தால் அண்மையில் பலராலும் பாராட்டப்பட்ட “புலிநகற்கொன்ற” போன்ற ஒரு காத்திரமான முழு நாவலை நடேசன் அவர்களால் கொடுத்திருக்க முடியும்.
விமர்சகர்கள் அனவராலும் ஒட்டு மொத்தமாகத் தரப்பட்ட ஒரு விமர்சனம் + இப்படப்பில் பல குறைகள் இருப்பினும் வாசகர்களுக்கு படிக்கும் போது சோர்வைத் தரவில்லை.. படித்து முடிக்கும் ஆவல் இருந்தது. என்னுள்ளும் அப்படியான ஒர் உணர்வு எழுந்தது அதற்குக் காரணம் நாம் அறியாத மேட்டுப்பாளயம்இ திருநெல்வேலிஇ பாண்டிச்சேரிஇ கொல்லம் என்று இல்லாமல்இ கொக்குவில்இவவுனியாஇமதவாச்சிஇபதவியாஇ+ கொழும்பு என்று எம்மோடு தொடர்புடைய எம்மைப் பழைய நினவிற்குள் இழுத்துச் செல்லும் ஊர்களிற்கு கதை சொல்லி எம்ம அழைத்ச் சென்றது தான்.
விமர்சகர் ராஜேந்திரா யாழ்ப்பாணத்ப் பெண்களின் கோழத்தனத்தயும்இ பிற்போக்குத் தனத்தயும் கடுமையாக விமர்சித்தார். மனதிற்கு வேதனயாக இருந்தாலும் அதுதான் உண்மை என்பதனால் மௌனமாக இருந்து விட்டேன். கலப்புத் திருமணம் வேண்டாம் கடைசி சாதிதராதரம் பார்க்கும் தன்மையயாவது யாழ்ப்பாணமக்கள் விட்டொழிக்க மாட்டார்களா.
|