மாதம்: ஏப்ரல் 2011
-
சிறுகதை: சலனங்களுக்கு வயதில்லை.
காலை எட்டு மணியளவில் ஜெனிவாவில் ஒரு குறுக்குத் தெருவில் சம்பந்த மூர்த்தி நின்றுகொண்டிருந்தார். அந்தத் தெருவின் ஒரு மூலையில் ரூரிஸ்ட் ஆபீஸ் இருந்தது. அங்கே நின்றால் ‘நீங்கள் அல்ப்ஸ் மலைகளுக்கு செல்லும் வாகனத்தை பிடிக்கலாம்’ என ஏற்கனவே பஸ் ஸ்ராண்டில் இருந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறி இருந்தாள். பிரான்ஸ்சும் ஆங்கிலமும் கலந்த அந்த பதிலில் சம்பந்த மூர்த்தி முடிந்தவரை ஆங்கிலத்தை பிரித்து எடுத்து புரிந்து கொண்டு தெருவைக் கண்டு பிடித்தது தன்னை ஒரு சாதனையாளனாக தனக்குள்…
-
உன்னையே மயல் கொண்டு – மூன்றாவது பாகம்
பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது. எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது. “எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன். “பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி. இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்ப்pரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான். “என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும்…
-
முதுமையின் எல்லை
நடேசன் ‘அம்மாவுக்கு அல்சைம்மேர் வியாதி வந்து விட்டது. நானும் எனது சகோதரியும் மாறி மாறி இரவில் அவரது வீட்டில் தங்கி இருக்கிறோம்.’‘நான் இரண்டு கிழமைக்கு முன்பாகத்தானே ‘ஒலி’யை பார்க்க வீட்டுக்கு சென்றேன். என்னால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை. அம்மாவை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும் ‘அம்மா தன்னை வயோதிபர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவோம் என்ற பயத்தில் நோயை மறைப்பதில் கெட்டிக்காரி.’எண்பது வயதான போலின் சான்லியின் இரண்டாவது மகள் லீசா. தாயின் நாயான ஒலியை என்னிடம் கொண்டுவந்தபோது எங்களுக்கு…
-
கருணையால் மட்டும் அல்ல.
நடேசன் இலங்கை அரசியல்வாதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரி மற்றும் புளட் அமைப்பினர் கூட கே. பத்மநாதனை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது ஏன் என்பது புரியவில்லை.. விடுதலைப்பலிகளையும் தனி ஈழக்கோட்பாட்டையும் கருத்தியல் ரீதியாக எதிர்த்த எனக்கு, வெறுப்புக்கலந்த பார்வையுடன் கே. பி. யை எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை. இந்த எதிர்பாளர்கள் எல்லோரும் வேறு காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது கோட்பாட்டையும்…